இதயக்கனி உலகிலேயே அமரராகிவிட்ட ஒரு மாமனிதருக்காக, அவரது மனிதநேயத்தை, புகழ் சாதனைகளை வெளிப்படுத்தும் முதல் இதழ் மற்றும் ஒரே இதழ், அது எம்.ஜி.ஆருக்காக வெளிவருகின்ற இதயக்கனி மாத இதழ் மட்டுமே.
இதயக்கனி நவம்பர் மாதம் 2000-ம் ஆண்டு தொடங்கி 12 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டுருக்கிறது.
இதயக்கனி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் அயல்நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், இங்கிலாந்து, அரபு நாடுகள், அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு செல்கிறது.
இதயக்கனி வாசகர் வட்டம் பெரிய முன்னணி இதழ்களுக்கு ஈடாக வளர்ந்திருக்கிறது.
இதயக்கனி அரசியல் சாராத நடுநிலை மாத இதழ்.
இதயக்கனி இணையதளத்தில் 2006-ல் தொடங்கி இப்போது 2011-ல் பெரிய மாற்றத்துடன் www.ithayakkani.com என்ற பெயரில் வெளிவருகிறது.
எம்.ஜி.ஆரின் நீண்ட கால விசுவாசிகளின் இதயக்குரலாக மட்டுமின்றி புதுப்புது விசுவாசிகளை அதுவும் பழைய படங்களையே பார்க்காத இளைய தலைமுறையினரைக் கூட எம்.ஜி.ஆர். விசுவாசிகளாக மாற்றுகின்ற அதிசயத்தை, சாதனையை இதயக்கனி மாத இதழ் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
'இதயக்கனி' மற்றும் தமிழக எம்.ஜி.ஆர். மனித நேய மன்றம் சேர்ந்து வருடந்தோறும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகிறது.
சமூக வலைதளத்தில் இணைய:
|