www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனி ஆசிரியரை பற்றி  
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இதயக்கனி ஆசிரியரை பற்றி...

Chennai  16-Apr-2011

இதயக்கனி எஸ். விஜயன் இதயக்கனி மாத இதழின் ஆசிரியர் ஆவார். கடந்த 13 வருடங்களாக இதயக்கனி மாத இதழை நடத்தி வருகிறார். துணுக்கு எழுத்தாளராக பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். கடந்த 32 ஆண்டுகளாக பத்திரிகைகளில் சுயேட்சை திரைப்பட நிருபராக, அரசியல் மற்றும் அனைத்து துறைகள் சார்ந்த பகுதிகளையும் எழுதி வருபவர்.இவர் தமிழில் வெளிவரும் அனைத்து நாளிதழ்கள், வார, மாத இதழ்களிலும் எழுதி வருகிறார். பத்திரிக்கையுலகில் திரையுலக தகவல் ஆராய்ச்சியாளராகவும் கருதப்படுபவர். கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் முதல் 'இதயக்கனி' என்ற மாத இதழையும்,2004-ம் ஆண்டு மே முதல் "இதயக்கனி சினிமா ஸ்பெஷல்", என்ற மாத இதழையும் ஆசிரியராகக் இருந்து நடத்தி வருகிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, புரூஸ்லீ, கிருபானந்தவாரியார், எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன் மற்றும் திரையுலகம் சார்ந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை ஆராய்ச்சித் தொடர்களை எழுதியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் எம்.ஜி.ஆர்., பற்றி நிறைய எழுதியுள்ளார். இவர் தயாரிப்பில், எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் வரலாற்றுப் படம் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளது.

எம்.ஜி.ஆர் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்திருக்கிறார்.


சமூக வலைதளத்தில் இணைய:

கருத்துக்களை பதிவு செய்ய...

www.ithayakkani.com
Reader Comments:
null02-Feb-2015

Nice

null06-Jan-2013

unkal message arumy nanru nanry arumy