www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  நாடகத்தில் எம்.ஜி.ஆர்  
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

நாடகத்தில் எம்.ஜி.ஆர்

Chennai  06-Apr-2011


எம்.ஜி.ஆருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் நாடக மன்றம் துவக்கினார். முதல் நாடகமாக இடிந்த கோவில் திருச்சியில் துவங்கியது. அதில் ரத்னமாலா கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆருக்கு இடிந்த கோவில் என்ற பெயரும் அபசகுனமாகப்பட்டது. அதனால் இன்பக்கனவு என்று மாற்றினார். ரத்னமாலாவுக்கு பதில் ஜி.சகுந்தலா நடித்தார்.

ஒவ்வொரு மாதமும் நாடக மன்றம் 1-ந் தேதி சென்னையை விட்டுக் கிளம்பினால் 20-ந் தேதி வரை வெளியூர்களில் நாடகம் நடக்கும்.

எப்போதும் இரவு 10-00 மணிக்கு மேல் நாடகம் துவங்கி நள்ளிரவு 2-00 மணிக்கு. சில சமயங்களில் அதிகாலை 4 -00 மணிக்கும் முடிவடையும். அதற்கு பின் உணவுண்டு. உடனே அடுத்த ஊருக்கு பயணம் துவங்கும்.

ஓவ்வொரு ஊரிலும் நாடகம் முடிந்து எம்.ஜி.ஆர். சிறிது நேரம் மக்கள் முன் உரை நிகழ்த்துவார். அப்போது தி.மு.க.வின் கொள்கைகளைப் பற்றி சொல்வார். நாடகத்துடன் கட்சிப் பிரச்சாரமும் சேர்ந்தே நடந்து வந்தது.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்குப் மேக்கப் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர் ஒரு சட்டையும், ஒரு பேண்டும் அணிந்து கொள்வார்.

கனவுக் கட்சியின் போது மட்டும்(சுமார் பத்து நிமிடங்கள் வரை இடம்பெறும்) விதம் விதமான வண்ண உடைகள் அணிவார். அந்தக் காட்சியின் போது அவர் ஒரு சில நொடிகளுக்குள் உடை மாற்றம் செய்து வருவது ரசிகர்களுக்கே பிரமிப்பூட்டும்.

எம்.ஜி.ஆர். எந்த ஊரில் நாடகம் நடத்துகிறாரோ அங்கு தனி பங்களாக்கள், வீடுகளை வாடகைக்குப் பிடித்து இருப்பார்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அனாவசியமாக எந்த ஒரு நடிகரும், ஒரு நடிகையைப் பார்த்து பேசி விட முடியாது. ராணுவ கட்டுப்பாடுகள் போலிருக்கும்.

அது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் வெளியாட்களால் தொந்தரவு நேரக்கூடாது என்று. எம்.ஜி.ஆர். தூங்காமல் டார்ச் லைட்டுடன் தங்கும் இடத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பார்.வீட்டிற்குள்ளும் சில சமயம் வெளிச்சம் வந்து விழும்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய நாடகங்கள் இன்பக்கனவு, அட்வகேட் அமரன், சுமைதாங்கி (இது பின்னர் நல்லவன் வாழ்வான் என்ற பெயரில் படமாகிறது), பகைவனின் காதலி ஆகியவை. புஷ்பலதா, ஜி.சகுந்தலா, தங்கவேலு ஆகியோர் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் மூலமாகத் தான் சினமாவுக்கு வந்தார்கள்.

சீர்காழியில் இன்பக்கனவு நாடகம் நடத்த போது அதில் சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர்., நடிக்கையில் குண்டுமணியை தூக்கிப்போடும் போது, அவர் வழுக்கி எம்.ஜி.ஆர். காலில் விழ, அதனால் எம்.ஜி.ஆர்., இடது காலொடிந்து போனது. சென்னை வந்து சிகிச்சை பெற்ற எம்.ஜி.ஆர்., ஆறே மாதங்களில் குணமாக்கி, சினிமாவில் மீண்டும் சண்டைக்காட்சிகளில் முன்னிலும் வேகமாக நடித்தார்.கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:
karthikeyan06-Jul-2015

Aaramba naatkalil vallalin kadanthu vantha kashtangalai ariyumpodu viyappahiradu.

karthikeyan06-Jul-2015

Aaramba naatkalil vallalin kadanthu vantha kashtangalai ariyumpodu viyappahiradu.

karthikeyan06-Jul-2015

Aaramba naatkalil vallalin kadanthu vantha kashtangalai ariyumpodu viyappahiradu.

chola. nagarajan12-Dec-2011

நல்ல தகவல். ஆனால், எம். ஜி. ஆர். எந்த ஆண்டு இந்த நாடகங்களை நடத்தினார்? இந்த நாடகங்களின் கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை மேற்கொண்டது யார்? இதுபோன்ற தகவல்களும், இதன் காலமும் அறியத் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி, உங்கள், - சோழ. நாகராஜன். பேச: 98425 93924.