"ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று குறிப்பிடுவதை ஒரு சிலர் பொருத்தமாக இருப்பதாகக் கருதலாம். வேறு சிலர் இது பொருத்தம் இல்லை என்றும் நினைக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை நான் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது என் உடலிலிருந்து நிறைய ரத்தம் விரயமாகியிருந்தது.
அப்போது என் உடலில் ரத்தம் செலுத்தி என்னை வாழ வைக்க ஆவன செய்தார்கள் மருத்துவ நிபுணர்கள். இதைக் குறிப்பிடுவது எனது நீங்காக் கடமையாகும்.
அந்த ரத்தத் துளிகள் என் உடலில் இருப்பதால்தான் நான் மனிதனாக உலவுகிறேன். அப்போது என் உடலில் செலுத்தப்பட்ட ரத்தம் யாருடைய ரத்தம் என்பது எனக்கும் தெரியாது.
ஆனால், அந்த ரத்தத் துளிகள்தான் என்னை மீண்டும் மனிதனாக ஆக்கியது.
அந்த ரத்தம் பலருடைய ரத்தமானதால் அனைவரையுமே நான்."என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று உரிமையுடன் அழைக்கிறேன்.
அதனை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் அதன் பிறகு கடிதம் எழுதும்போதும் அல்லது மேடையில் பேசும் போதும் எனது உடன்பிறப்புக்களை "ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று குறிபிடுகிறேன்.
|