எம்.ஜி.ஆர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தது.அவற்றில் சில...
எங்க வீட்டுப் பிள்ளை: நான் மரத்துக்கு மரம் தாவும் வண்டு அல்ல. பலத்தோடு இருந்து பழத்தோடவே அழிஞ்சி போகுதே, அந்த வண்டு இனத்த சேர்ந்தவன்.
நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.
நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
தாயைக் காத்த தனயன்: பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.
ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.
விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.
எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணாவின் எண்ணங்கள்
அவரே ஒரு கவிதை
அறிஞர் அண்ணா,(இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, சென்னை): நமது எம்.ஜி.ஆர் அவர்கள் பேசும் பொழுது. அழகும், உள்ள உணர்ச்சியும் உள்ளதுதான் 'கவிதை' என்று சொன்னார். இதைச் சொல்லும் போது நீங்கள் எல்லாம் கைதட்டி மகிழ்ந்தார்கள். எதற்காக கைதட்டுகிறீர்கள் என்று எண்ணிப் பார்த்தேன்.அப்போது தான் அவர் தன்னைப் பற்றி பேசினார் என்று புரிந்தது. அது அவருக்குத் தான் பொருந்தும்.
என் இதயக்கனி
அறிஞர் அண்ணா,('நாடோடி மன்னன்' வெற்றி விழாவில் பேசியது): எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாக கருதப்படும். உண்மை தானே. எம்.ஜி.ஆர். என்றால் அவர் தாங்கி யுள்ள கொள்கை எது என்பதை கூற வேண்டும்? இந்தக் கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர்.அது என் மடியில் வந்து விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்.
எம்.ஜி.ஆரின் கருத்துக்கள் தொடரும்...
|