www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்  
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

சென்னை  14-Apr-2011


உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர் எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.

திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம் என்று சொல்லும் அதே நேரத்தில் அரசியலிலும் அவர், யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராக விளங்கினார்.

சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கை கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைத்து விட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்ல இயல்புகளை உணர்ச்சி வசத்துடன் சொல்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே "மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்" என்று 'தெய்வத்தாய்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போல அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.

இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917 -ந் தேதி ரேவதி நட்சத்திரத்தில்.

எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு.

முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாக பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்ரபாணி.

பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்க்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் பெற்றோர். நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருத்த கும்பகோணம் நகருக்கு தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.

கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்பத்திலுள்ள வசதியின்மை இடம் கொடுக்கவில்லை.

பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடந்த 'லவகுசா' என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும்,முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

தன்னையும் சேர்த்துக் கொண்டதாள் தான் தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். "படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே" என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். வாரத்துக்கு நாலரை சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைத்தன. கம்பெனியில் சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜ்பார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடித்தார்.

நாடகக்குழு சேர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர் அந்த கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார்.

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.

அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில் சேர எம்.ஜீ.ஆர்., சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாக பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர்., தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு புறப்பட்டார்.

ரங்கூனுக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு 'காளி' என்.ரத்தினம் ஆவார்.

சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ஆரம்ப கால முன்னணி நடிகர் அவர். அவரது காதல் மனைவி தான் நகைச்சுவை நடிகை சி.தி.ராஜகாந்தம்.

இந்த சமயத்தில் தான் 'சதிலீலாவதி' படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.

அதைத் தொடர்ந்து தி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த 'இரு சகோதரர்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி, சக்ரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'saalivaganan' படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.

அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். 'ராஜகுமாரி' என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள்.

குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம்" என்றார்.

செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.

'ராஜகுமாரி' படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.

எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்தோம்.

எதிரே காயான் குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ள பள்ளி பழைய இடத்திலிருந்து சற்று இடம் பெயர்ந்திருக்கிறது.

அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் 'நாகேஸ்வரம் வடக்கு வீதி' என அழைக்கப்படுகிறது. முன்பிருந்தது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டன.

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர்.

ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபானயையும் சேர்ந்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதை பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போல விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ் மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம்.

கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.

பள்ளியில் நடந்த 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார்.

இந்த நாடகம் தான் நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.

பள்ளி பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும் , வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியில் விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம்.

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின் ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை முனு ஆதி திறந்து வைத்தார்.

30-10-1977 ல் தஞ்சை மாவட்ட பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியை சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களை பார்த்தார்.

எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாக குறிப்பிட்டார்.

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:
Dhanapal v31-Mar-2016

MGR ORU NADAMATIYA THEYVAM

CHANDRAN22-Oct-2013

vanakam ayya inaiya thalathil namma theivathin VAALKAI VARALAARAI padikkumpoluthu ippothu antha DEIVAM nammalodu illaiye entru nikkumpothu enathu UYIR pirithuvidum pol ullathu VAALGA ANNA NAAMAM VALAGA MGR NAAMAM

VARATHN 02-Aug-2013

vzhal thavar kodi marainthavar khodi makkalin manathil andru muthal intru vari jothiyaga thigal bavar puratchi thalaivar MGR

nisha06-May-2013

mgr again have birth. srilankavin problam thirum. i can little english writing. tamil eluthinan parthu sed pannunga. ok bye.

suresh10-Sep-2012

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்செருக்கும், என்பதை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மாமனிதன் மக்கள் திலகம்

D SUNDARARAJAN12-Apr-2012

"Moondrezlhuthi En Moochirukkum endrayay! Moondrezluthu Ullathu Moochu Illayay Thalivaa!Aanal Un Petchu Irukkum Engalin Moochirukkum Varai.-D.Sundararajan Chitlapakkam.

Chandra31-Jan-2012

MGR was suffering in his childhood. His mother was like God. How to manage to the problems solved. She was a great. MGR studied upto 3rd std. But his knowledge like he was a graduate person.