www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  எம்.ஜி.ஆரின் நினைவிடம்  
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

எம்.ஜி.ஆர் நினைவிடம்

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917-டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். திரைப்பட துறையிலும், சினிமா வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர்.

அவர் இறந்த பிறகு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தை அமைத்தது. அவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையா தீபம் ஒன்று ஏற்றப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய சில பொருட்களும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து எம்.ஜி.ஆரின் நினைவிடத்தையும் அவரது அருங்காட்சியகத்தையும் பார்த்து செல்கின்றனர்.

எம்.ஜி.ஆர். அணிந்த மாவுக்கட்டு

1967 ல் எம்.ஜி.ஆர். துப்பாகியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்ற போது அவருக்கு இரண்டு முறை மாவுக்கட்டு போடப்பட்டது. குணமாகிய பின் எம்.ஜி.ஆர். அதைத் தூக்கி எரிந்து விடவில்லை. கிலோ கணக்கில் எடையுள்ள கனமான அந்த மாவுக்கட்டு இரண்டும் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் காட்சிப் பொருளாக உள்ளது.

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: