www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தமிழக அரசு எதிர்க்கலாமா?

சென்னை -  23-Mar-2012



கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது என்று பெரும் போராட்டம் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக குறிப்பிட்ட சிலரால் நடத்தப்பட்டு வந்தது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் உதயகுமார் என்பவர் தமிழகமெங்கும் வெற்றி வீரனைப் போல் உலா வந்தார். மத்திய, மாநில அரசுகள் அவரைக் கண்டித்ததோடு நிறுத்திக் கொண்டன.



அரசு இயந்திரங்கள், தான் இப்படி நடந்து கொண்டனர்கள் என்றால் ஊடகங்களின் போக்கும் புரியவில்லை 'கூடங்குளம்' அணுமின் நிலையம் வேண்டும்.' என்று ஒரு பக்கம்; 'வேண்டாம்' என்று கூறுவோர் இன்னொரு பக்கம் - இதை விவாதப் பொருளாக்கிப் பார்த்தனரேயன்றி, பிரச்னையின் உண்மை வடிவம் என்ன, கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா, இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்காமல் இது நாள் வரை மேம்போக்காகவே விவாதங்களை வெளிபடுத்தி வந்துள்ளனர். வலிமை மிக்க ஊடகங்கள் இப்போது செயலிழந்து விட்டதாகவே தெரிகிறது. வியாபாரிகளின் கைகளுக்குள் சிக்கிய ஊடகங்கள், அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப செயல்படும், சம்பளத்திற்கு வேலை பார்க்கும் கற்றுக்குட்டிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன. அதனால் மக்களுக்கு உண்மை நிலவரம் புரியவில்லை.

இந்தியாவில் 20-க்கு மேற்பட்ட அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக அது இயங்கி வருகிறது. அவற்றால் மக்களுக்கு பிரச்னை உண்டா என்பதை வெளிபடுத்தியிருக்க வேண்டாமா? அரசியல் கட்சிகள், அரசு இயந்திரங்கள், ஊடகங்கள் - இன்று பொறுப்பின்றி செயல்பட்டு வருகின்றன.

சரி மாநில அரசு ஒரு தீர்மானத்துடன் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படலாம் என்று அனுமதியளித்தால் - அரசியல் தலைவர்கள் கண்டிக்கிறார்கள். அவர்கள் எந்த மக்கள் பிரச்னையைத் தீர்க்க முனைந்தார்கள்? கூடங்குளத்தில் அத்தனை கட்டுமான பணிகளும் முடிவடைந்த பின் கூடாது என்று சொல்ல ஒன்று பட்டிருக்கிறார்கள். தொடங்கிய போதே இந்த ஒற்றுமையைக் காட்டியிருக்கலாமே. தமிழக அரசு இந்த விஷயத்தில் இனி உறுதியான நடவடிக்கை எடுத்து, கூடங்குளம் மக்களுக்கு உண்மை நிலையை புரியவைத்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்து பிரச்னைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிறையவே இருக்கிறது.

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

SANJAY24-Mar-2012

KANDIPPA PALAN ERUKKUM..................