www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சிகரம் தாண்டிய இயக்குனர் சிகரம் - பாலச்சந்தர்!

சென்னை -  2014-12-23 00:00:00.0சினிமாவில் 1964ல் வெளியான 'தெய்வத்தாய்' படத்தில் தன் பாதையைத் தொடங்கிய கே.பாலசந்தர், பொன் விழாவைப் பூர்த்தி செய்த ஆண்டில் (2014) தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு அதிசய ஒற்றுமை, சினிமாவில் பாலசந்தரை அறிமுகம் செய்த எம்.ஜி.ஆர், அமரத்துவமான அதே டிசம்பர் 23ல், (அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் 24 என்றிருக்கிறது) அதே நேரத்தில் பாலசந்தரும் இயற்கை எய்தியுள்ளார்.ஒரு அரசு பணியாளராக இருந்த பாலசந்தர் நாடக உலகில் புகுந்து எழுதி, இயக்கி, நடித்து பிரபலமானார். ராகினி ரிக்ரியேஷன்ஸ் என்ற நாடக அமைப்பு பாலசந்தர் சினிமாவுக்குள் வர காரணமானது. 'தெய்வத்தாய்' படத்திற்கு வசனம் பாலச்சந்தருடையது. அதற்கு பின் 'நீர்க்குமுழி'யிலிருந்து அவர் இயக்குனராக வளர்ச்சி கண்டார். தொடர்ந்து ஏறு முகத்தில் மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா, தாமரை நெஞ்சம், நான்கு சுவர்கள் (முதல் வண்ணப்படம்), நூற்றுக்கு நூறு, நவக்கிரகம், எதிர்நீச்சல், எதிரொலி (சிவாஜியை இயக்கிய ஒரே படம்), பாமா விஜயம் என்று பயணம் நீண்டது.'அரங்கேற்றம்' சர்ச்சைக்குரிய பாலசந்தரை அறிமுகம் செய்தது. பாலசந்தரின் கரம்பட்டு கமல்ஹாசன் இதிலிருந்து சேர்ந்து வளர்ச்சி பெற்றார். அபூர்வ ராகங்கள் (இதில் ரஜினியும் அறிமுகமானார்). 'மூன்று முடிச்சு' (கமல் ஹாசன்-ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி மூவரும் பிரபலங்கள் ஆயினர்), அவள் ஒரு தொடர்கதை, தப்புத்தாளங்கள், அவர்கள் என்ற இவற்றில் பல படங்கள் தெலுங்கு, கன்னட, இந்தி வடிவம் பெற்றன. 'அரங்கேற்றம்' இந்தியில் 'அய்னா' என்ற பெயரில் உருவாக பாலசந்தரே இயக்கினார். கமல்ஹாசனின் நடிப்பில் ? சரிதாவின் அறிமுகத்தில் வந்த 'மரோ சரித்ரா' பெரும் வெற்றி பெற, அதுவே இந்தியில் 'ஏக் துஜே கேலியே' என்ற பெயரில் பாலசந்தருடன் கமலை இந்திக்கும் கொண்டு சென்றது. 'வறுமையின் நிறம் சிவப்பு' - தமிழ், இந்தி இரு மொழிகளிலும் கமல்-பாலசந்தர் இணைந்தனர்.

புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள், சிந்து பைரவி, கல்கி, டூயட், பொய் (இதில் நடிகராகவும் அறிமுகம்), என்று 100 படங்களைத் தாண்டினார்.

உழைப்பில் பாலசந்தருக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. 50 ஆண்டு காலமும் உழைப்பு தான். சதா சிகரெட்டும் கையுமாக இருந்த அவருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டு மீண்டு வந்தார்.
மூன்று மாரடைப்புக்குப் பின்பு கால் நூற்றாண்டு கடந்தவர் பாலசந்தர் ஒருவராகத்தான் இருக்கும். அந்த சாதனையோடு பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற சாதனைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
'கவிதாலயா' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ?நெற்றிக்கண், முதல் ரஜினிகாந்தின் பல படங்களையும், 'எனக்குள் ஒருவன்' போன்ற கமல் படங்களையும், மனதில் உறுதி வேண்டும் (பாலசந்தரே இயக்கினார்). ரோஜா (மணிரத்னம் இயக்கினார்) என்று பலருக்கு வாழ்வளித்தது. மாநில, மத்திய அரசுகளின் ஏராளமான விருதுகளை பாலசந்தரின் படங்கள் பெற்றுத்தந்துள்ளன. பிலிம்பேர் விருதுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படி சில வரிகளில் பாலசந்தரைப் பற்றி கூறி விட முடியாது. அவரது சாதனைகள் அபாரமானவை, அபூர்வமானவை. அவை எதிர்காலத்திற்கு, பல தலைமுறையினருக்கு கொண்டு செல்லும். ஒரு இரங்கல் அஞ்சலிக்குள் அவரை அடக்கி விட முடியுமா?

1930 ஜூலை 9ல் பிறந்த இவர் 84 வயதில் மறைந்தார்.


2004 மே மாதம் இதயக்கனி குழுமத்திலிருந்து வெளிவரும் இதயக்கனி சினிமா ஸ்பெஷல் மாத இதழ் வெளியிட்டு விழாவில் பாலசந்தர் கலந்து கொண்டது எங்களுக்கு பெருமை...புகைப்படத்தில் பாலசந்தருடன் கமல் ஹாசன், பத்திரிகையாளர் மேஜர் தாசன், இதயக்கனி சு.விஜயன்பாலசந்தர் மறைவுக்கு ரஜினி வருகை தரும் காட்சி...உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani Cinema Special magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com


கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: