www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மூன்று நாட்கள் இதயக்கனி நடத்திய எம்.ஜி.ஆர் 97!

சென்னை -  2014-07-23 00:00:00.0"எம்.ஜி.ஆர். 97" தமிழக அரசின் செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் எம்.ராஜாராம், அறிவியல் விஞ்ஞானி திரு. V. பொன்ராஜ், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், இயக்குனர் விக்ரமன், நடிகர்கள் மயில்சாமி, வின்சென்ட் அசோகன் மற்றும் ஆர்.பாண்டியராஜன், பங்கேற்பு!

மருத்துவ முகாம்கள் மூலம் பல லட்சம் மதிப்புள்ள மருத்துவ பலனை விலையின்றி பெற்ற பயனாளிகள்!சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் "எம்.ஜி.ஆர். 97" ஆவது பிறந்தநாளை "எம்.ஜி.ஆர் - 97" என்ற பெயரில் இதயக்கனி மாத இதழ் ஜூலை 18,19,20 ஆகிய நாட்களில் புத்தக, புகைப்பட, மருத்துவ மற்றும் உணவுத் திருவிழாவாக நடத்தியது.

18-07-2014

முதல் நாள் காஞ்சிபுரம் சத்யா சர்க்கரை நோய் மையம் சார்பில் டாக்டர். சத்யநாராயணன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ரத்த அழுத்த பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை, எக்கோ இதயம் ஸ்கேன் பரிசோதனை, வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை என்று முகாமில் ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய பரிசோதனையை மக்கள் விலையின்றி செய்து கொண்டனர். இது போல் மருத்துவ முகாமில் கருவிகளை கொண்டு வந்து பயன்படுத்துவது ரொம்ப அபூர்வம்.

ஸ்ரீராம் கல்வி குழுமத்தின் சித்தமருத்துவ கல்லூரி சார்பில் சித்தமருத்துவ முகாம் நடைபெற்றது. முதல் நாள் முகாமினை அறிவியல் விஞ்ஞானி திரு.V. பொன்ராஜ், மற்றும் நடிகர் விவேக் தொடக்கி வைத்தனர்.

மூன்று நாட்களும் கோவை ரோட்டரி சங்கம் சார்பில் "இயங்கும் கை" விலையின்றி வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் பயன் பெற்ற முதல் பயனாளி எண்ணூரிலிருந்து வந்திருந்தார். கையிழந்த அவருக்கு 'இயங்கும் கை' பொருத்தப்பட்டது.

முதல் நாள் மாலை அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலர் தமிழ்மகன் உசேனின் புதல்வர் த.ஷாஜி தனது குழுவின் சார்பில் எம்.ஜி.ஆர் பாடல்களை இசைத்து வழங்கி பாடினார். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததாக வெ. பொன்ராஜ் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பொன்ராஜின் மதுரை நண்பர் சுகுமார், 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' பாடலைப் பாடினார்.

19-07-2014

இரண்டாம் நாளில் எ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ முகாம் நடைபெற்றது. சாய்ராம் ஹோமியோபதி மருத்துவ முகாமில் 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்று பயனாளிகளை பொறுமையுடன் கவனித்து மருந்துகளை வழங்கினர்.

நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜயசங்கரின் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாம்களை திரைப்பட இயக்குனர் வி.சி.குகநாதன் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்..

மாலையில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உதவியுடன் தமிழ்நாடு சிலம்ப கழக பொதுச்செயலாளர் சிலம்பம் கே.ரவியின் மாணவர்கள் (4 வயது முதல் 15 வயது வரையுள்ளவர்கள்) சிலம்ப விளையாட்டு மற்றும் வீர விளையாட்டுகளை செய்து காண்பித்ததை பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள்.. இவர்களை இதயக்கனி ஆசிரியர் எஸ். விஜயன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்..

எம்.ஜி.ஆர். - ஜானகி கலைக் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர். பற்றி ஒரு மாணவி உரையாற்றினர்.

கோவை விஸ்வேஸ்வரா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி பிரியாவின் கரகம் - சாகச நிகழ்ச்சிகள், பொம்மலாட்டம் வந்திருந்த அனைவரையும் ஈர்த்தது. திரைப்படக் கலைஞர்களின் நிர்வாகியான கிரி (எ) கிருபாசங்கர் மனமகிழ்ந்து பாராட்ட எஸ்.பி.முத்துராமன் வி.பொன்ராஜ் மூலம் 10 ஆயிரம் ரூபாய் அளித்து பாராட்டினார்.

20-07-2014

நிறைவு நாள் விழா அன்று காலையில் மருத்துவ முகாம்களை நடிகர். ஆர்.பாண்டியராஜன் பார்வையிட்டார்..
மாலை நிகழ்ச்சியில் பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவையைச் சேர்ந்த ஜூலியா கோதண்டம், ஜனனி, கவிதா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனனி தாம்பாளத்தின் மீது நின்று நடமாடியது புதுமை.

தொடர்ந்து நடிகர் டி.எஸ். பாலையாவின் புதல்வர் ஜெய் பாலையா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடினர். பாடல்களின் கருத்து பற்றிய விளக்கவுரை தந்தார் மதுரை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். இந்த நிகழ்ச்சியில் த. ஷாஜி குழுவினரும் பங்கேற்று பாடினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக அரசின் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் எம்.ராஜாராம், அப்துல் கலாமின் ஆலோசகரும் அறிவியல் விஞ்ஞானியுமான வி.பொன்ராஜ், திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர்கள் வின்சென்ட் அசோகன், மயில்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்காக 'இதயக்கனி' சார்பில் அமைக்கப் பட்டிருந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் புகைப்பட கண்காட்சியை எம்.ராஜாராம் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.

மேடையில் அவர் கண்காட்சி பற்றி குறிப்பிட்டதுடன்,

தமிழக முதல்வர் பற்றி செய்திதுறை சார்பில் வெளிவந்த புத்தகங்களை மேடையில் இருந்த பிரமுகர்களுக்கு பரிசாக வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த இதயக்கனி ஆசிரியர் எஸ்.விஜயன் நன்றி தெரிவித்தார்.


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: