www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

அண்ணா வழியில் அயராது உழைப்பதென்ன?

சென்னை -  2013-09-15 00:00:00.0



இன்று 15.9.2013 பேரரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இந்த ஒரு நாளிலும், பிப்ரவரி 3ல் அண்ணாவை நினைவு கூறுவதிலும் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக அரசியல் உலகம் கருதுகிறது.



"அண்ணா வழியில் அயராது உழைப்போம்- கண்ணியமாய் அண்ணன் சொன்னதைச் செய்வோம்" என்றும் "அண்ணா நாமம் வாழ்க" என்றும் முழங்குகிறார்கள். அவரது பெயருக்கும், கொண்ட கொள்கைகளுக்கும் நாமம் போடுவதோடு சரி- அவர் சொன்ன வழிகளை பின்பற்றுகிறார்களா என்றால் உரிய பதிலைத் தேடுகிறோம்.



எளிய வாழ்க்கை முறை அவருடையது. அரசியலில் எதிர்கட்சித்தலைவராக இருந்த போதும் சரி. ஆளும் கட்சி தலைவர், முதல்வராக இருந்த போதும் சரி நேர்மை அவரது சொத்தாக இருந்தது.

லஞ்சம், அன்பளிப்பு எல்லாம் அவரது காலத்தில் கிடையவே கிடையாது. அண்ணா அமரரான போது விட்டுச் சென்றதெல்லாம் புத்தகங்கள், மனைவி, வளர்ப்பு மகன்கள் அவ்வளவு தான். அவருக்குப் பின் கடன் தொல்லையால் தானே அவரது மூத்த மகன் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அண்ணா பெயரைச் சொல்லும் தலைவர்கள், இயக்கங்கள் குடும்ப பாரம்பரியங்களுக்கு சொத்துக்களை சேர்த்துவிட்டனர். ஊழல் என்பது தமிழக அளவில் இருந்ததை தேசிய அளவில், சர்வதேச அளவில் பல்கிப் பெருக அண்ணாவின் தம்பிகள் எனப்படுபவர்கள் காரணமாகி விட்டனர். எந்த அடிப்படை சொத்துமின்றி ஒரு விமான நிறுவனம் நடத்துமளவில் ஊழலில் உயர்ந்து விட்டார்கள்.

தமிழ்ச் சமுதாயம் சீர்பட முடியாத அளவுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர். அண்ணாவின் பெயரைச் சொல்ல எந்தத் தம்பிக்குமே இன்று தகுதி இல்லை.

ஆனாலும் "அண்ணா வழியில் அயராது உழைப்போம்" என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று அண்ணா பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



Keyword Tags »
anna, arignar anna, annadurai, september 15, february 3, arignar anna birthday, cheif minister, tamilnadu, tamilan, anna books, parimalam, dmk


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: