www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ஊழல் ஒரு தொடர்கதை!

சென்னை -  2012-03-10 00:00:00.0



லஞ்ச வழக்கில் சிக்கிய மத்திய அரசு அதிகாரி, கோடி கோடியாக சம்பாதித்த பணத்தை, அறக்கட்டளை பெயரில் முதலீடு செய்துள்ள விவரத்தை, பல மாத கண்காணிப்பிற்கு பிறகு, சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.



சென்னையில், லஞ்ச வழக்கில் கைதான மத்திய அரசு அதிகாரி, தி.மு.க., மத்திய அமைச்சர் ஒருவரின் ஆதரவால், தமிழகத்தில் பல பதவிகளில் கோலோச்சி' வந்தார். கடத்தல்காரர்களை பாய்ந்து பாய்ந்து பிடித்து பத்திரிகைகள், டிவி-களுக்கு பேட்டி கொடுப்பவர், திரைமறைவில் பிடிபட்ட கடத்தல்காரர்களிடம் பேரம் பேசி, லட்சக்கணக்கில் கறந்துள்ளார்.

இது பற்றிய ஏகப்பட்ட புகார்கள், கடந்த தி.மு.க., ஆட்சிலேயே சி.பி.ஐ. தலைமைக்குச் சென்றன. பழனி முருக கடவுளின் பெயரைக் கொண்ட மத்திய அமைச்சரின் ஆசியால், ஊழல் புகார்களில் சிக்காமல் தப்பித்தார்.

பல மாதங்களாக ஊழல் அதிகாரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து, அதன் மூலம் திரட்டிய ஆதாரங்களை, டில்லிக்கு அனுப்பினர். ஊழல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க, டில்லியில் இருந்து சென்னை சி.பி.ஐ., க்கு அனுமதி கிடைத்தது.

தமிழகத்தில் நேர்மையான அதிகாரியாக காட்டிக் கொள்ளும் அந்த அதிகாரிக்கு, பெங்களூரில் சில நம்பிக்கையான ஏஜென்ட்டுகள் உள்ளனர். சென்னையில் சிக்கும் கடத்தல்காரர்களிடம், அதிகாரி நேரடியாக பேரம் பேசாமல், திரைமறைவில் முகவர்களை பேச வைப்பார்.

இது தவிர, கோடி கோடியாக சம்பாதித்த லஞ்ச பணத்தை, அறக்கட்டளை பெயரில் முதலீடு செய்து, அப்பணத்தை பல கைகள் மாற்றியதற்கான ஆவணங்களை, சி.பி.ஐ. அதிகாரிகள் சத்தமில்லாமல் சேகரித்து உள்ளனர்.

மத்திய அமைச்சருடன் ஏற்பட்ட நெருக்கத்தால், 'தானைத் தலைவரின்' வயதான, பெங்களூரில் இருக்கும் பெண் வாரிசு மற்றும் அவரது கணவருடன் நடத்தி வரும் கட்டடத் தொழிலில் முதலீடு செய்த விவரங்களை, சி.பி.ஐ திரட்டி உள்ளது.

லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி மீது, ஏகப்பட்ட புகார்கள் சி.பி.ஐ.யின் கிடப்பில் உள்ளன. அந்த புகார்கள் ஒவ்வொன்றாக தூசி தட்டப்படுகின்றன.


ஆதாரம்: தினமலர்

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: