www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

கிரிக்கெட் மோகம் 2012!

மிர்பூர் -  11-Mar-2012



ஆசிய கோப்பை 2012 -கிரிக்கெட் போட்டி இன்று (மார்ச் 11) முதல் மார்ச் 22 வரை நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் மோதுகிறார்கள்.



இதில் இந்திய அணி வீரர்கள் டோனி(கேப்டன்), கொஹ்லி (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், கௌதம் கம்பீர், அசோக் டிண்டா, ரவீந்திரா ஜடேஜா, பிரவீன் குமார், இர்பான் பதான், யுசுப் பதான், சுரேஷ் ரைனா, ராகுல் ஷர்மா, ரோஹித் ஷர்மா, சச்சின் டெண்டுல்கர், மனோஜ் திவாரி, வினய் குமார், ஆகியோர் இந்திய கிரிக்கெட் கவுன்சிலிலிருந்து தேர்வாகியிருக்கிறார்கள்.

செஹ்வாக் (முன்னாள் துணை கேப்டன்), சாகிர் கான், இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுபடி இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் கிரிஷ் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். யுமேஷ் யாதவ்-அணியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி லைவ் அப்டேட்ஸ்-இதை கிளிக் செய்யவும்

இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி துவங்கப்படுகிறது.

தேதிஆசிய கோப்பை அணிகள்இடம்
மார்ச் 11பங்களாதேஷ்-பாகிஸ்தான்ஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர்
மார்ச் 13இந்திய-இலங்கைஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர்
மார்ச் 15பாகிஸ்தான்-இலங்கைஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர்
மார்ச் 16பங்களாதேஷ்-இந்தியாஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர்
மார்ச் 18இந்தியா- பாகிஸ்தான்ஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர்
மார்ச் 20பங்களாதேஷ்-இலங்கைஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர்
மார்ச் 22இறுதி போட்டிஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர்



எம்.ஜி.ஆரின் கிரிக்கெட் மோகம்:

எம்.ஜி.ஆர். தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்று பெரும்பாலானோருக்குத் தெரியாது. வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சிகள் என்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் எம்.ஜி.ஆர்., பயன்படுத்திய பல காரணங்களில் கிரிக்கெட் பார்ப்பது, கிரிக்கெட் வர்ணனை கேட்பது என்று உண்டு. தனது ரசனையை அவர் விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. எம்.ஜி.ஆர்., கிரிக்கெட் விளையாடியதில்லை என்பதைத் தவிர, அதன் அத்தனை அம்சங்களும் அவருக்கு அத்துபடி.

திருச்சியில் தி.மு.க.வின் வளர்ச்சி நிதிக்காக எம்.ஜி.ஆரின் தலைமையில் 'காவேரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் ஜெயலலிதா குழுவினர் நடத்திக் கொண்டிருக்க, கீழே பார்வையாளர் வரிசையில் கொஞ்சம் தனியாக உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். டிரான்சிஸ்டரில் (பேட்டரியில் இயங்கும் கையடக்கமான அளவில் இருக்கும்) கிரிக்கெட் வர்ணனையை காதில் வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். வலது காதை பொத்திக் கொண்டு தலையை குனிந்தது போல் தெரிந்தது பார்ப்பவர்களுக்கு. ஒன்றிரண்டு பத்திரிகையாளர்கள் தான் அதை மோப்பம் பிடித்து செய்தியாக்கினர்.

காரில் முதன் முதலில் டிவி., பொருத்திக் கொண்டது எம்.ஜி.ஆர்., தான். அது செய்திகளுக்காக மட்டுமின்றி, டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவும் தான். கிரிக்கெட் வர்ணனையை கேட்பதாகட்டும், நிகழ்ச்சிகளை பார்ப்பதாகட்டும் அவர் ஒரு தனிமை விரும்பி.

எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த பொது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நேரடியாகச் சென்று பார்த்தது மட்டுமின்றி கபில் தேவ், கவாஸ்கர் போன்ற இந்தியா வீரர்களையும், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களையும் கவுரவித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டி முழுவதையும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தார்.

சிவாஜி நடிகர் சங்கத் தலைவராக இருந்த பொது பெங்களூரில் தமிழ், கன்னட திரையுலகினர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு தலைமை தாங்கி நடத்தி வைத்தார் நடிகர் எம்.ஜி.ஆர். இப்படி வெளியே தெரிந்த தகவல்கள் குறைவு. தெரியாதது நிறைய உண்டு.



சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் பாகிஸ்தான் கேப்டன் ஆசிப் இக்பால், இந்திய அணி கேப்டன் கவாஸ்கர், தொழிலதிபர் ஏ.சி. முத்தையா (சிதம்பரம் மைதானத்தின் தலைவர்), அமைச்சர் ராகவானந்தம்.


விரைவில் cricket.ithayakkani.com இணையதளம், கிரிக்கெட் நேரலை ஸ்கோர் அப்டேட்ஸ், புகைப்படங்கள்(எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தவை)....

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

Chandra20-Mar-2012

I am very very happy that MGR was a sportive person. He was in all in all person.


vlathangi12-Mar-2012

nice to read about dr purachith thalaivar. hes so sportive person.


raj11-Mar-2012

mgr rockzz......