www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

கென்யாவுக்கு இந்தியா தாழ்ந்ததா?!

புதுடெல்லி -  2013-08-22 00:00:00.0அண்மையில் கென்யா, தான்சானியா ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் சென்று வந்த அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், தன் அனுபவங்களை இங்கே விவரித்துள்ளார்.அண்மையில் எனது கென்ய நாட்டு வன உலாவின்போது அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சியும், அங்கே சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்படும் வசதிகளும் என்னை வியக்கச் செய்தன. இன்னும் வளர்ச்சியடையாத நாடான கென்யாவில் அவர்களது சுற்றுலாத் துறை வன உலாவை அடிப்படையாகக் கொண்டு பயணிகளின் தேவைக்கேற்ப பல விதமான ஒன்று இரண்டு மற்றும் 40 இருக்கைகள் கொண்ட விமான ஓடுபாதையோ, விமான வழித்தடங்களோ, விமான போக்கு வரத்துக் கட்டுப்பட்டு அறையோ இல்லாமல், மிகவும் சாதுர்யமாக வெறும் மண் தரையிறங்கிய உடனே பெரிய அளவு மற்றும் வசதியான யாத்திரை வாகனங்கள் சுற்றுலா பயணிகளை தாங்கும் விடுதிகளுக்கும், பின்னர் அங்கிருந்து அவர்களது வன உலாவிற்கும் அழைத்துச் செல்கின்றன.

இங்கே ஏற கென்யா, ரீஜினல் ஏர் சர்வீஸஸ் மற்றும் ஏரோலிங்க் எனும் மூன்று வன உலா விமான சேவையாளர்கள் இயங்கி அம்போசெல், டியானி,கிளிமஞ்சாரோ, லமு, லீவா டவுன், மல்லிந்தி, மசை மாறா,மீறு, நெய்ரோபி, நர்யுகி, சம்புறு, நக்குறு, அறுஷா, தர்-ஈ-சலாம், குருமீத்தி, கிலன்ஸ் கேம்ப், கோகாட்டின்டே, மன்யாரா, நடுட்டு, சஸ்காவா, சிரோநேரா, ஜன்ஜீபார், லோபோ, நுழைய முடியாத காடு எனப்படும் பிவிந்தி, குயின் எலிஸபெத் நேஷனல் பார்க், முற்சிஸன் ஃபால்ஸ் (அருவி) என இருபதிற்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் டன்சானியாவில் உள்ள சிராங்கட்டி நேஷனல் பார்க், நகரோங்கோரா நேஷனல் பார்க் போன்ற சுற்றுலா தலங்களுக்கும் நமது தேவைக்கேற்ப விமான வழித் தடங்களில் அழைத்துச் செல்கின்றனர்.

இதைக்கண்டதும், நம் நாட்டின் விமான சேவை என் மனக்கண் முன்னால் தோன்றியது. அபரிதமான, வளர்ந்த நாடுகளையும் மிரளவைக்கும் வேகத்தில் வளர்ந்து வரும் நம் நாட்டில், தற்போது மதுரை, திருச்சி, கோவை மற்றும் தூத்துக்குடி போன்ற முக்கிய ஊர்களுக்கு தலை நகர் சென்னையிலிருந்து மட்டுமே விமான சேவை இயக்கப்படுகிறது. அதுவும் இந்த இடங்களுக்குள் விமான இடைப் போக்குவரத்துத் தடங்கள் (பாதை) இல்லை.

சரித்திர பாரம்பரியமிக்க, பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கலாச்சாரத்தில் உருவான தமிழகத்தின் சிறப்புக்கள் மிகுந்த இடங்களான ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை, திருத்தணி, திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிப்புத்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்றவற்றை ஒன்றோடு ஒன்று இணைக்கும் விமான வழித்தடங்களை கலாச்சார சுற்றுலா என்றும், இதர சுற்றுலா ஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், சுருளி, மூணார், தேக்கடி போன்றவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து விமான வழித்தடங்களை பொழுது போக்கு சுற்றுலா என அமைத்து, வியாபாரத் தலைநகரங்களான கோவை, மதுரை, சேலம், தூத்துக்குடி, சென்னை, திருச்சி ஆகிய இடங்களை வியாபார உலா எனவும் விமானம் வாயிலாக இணைத்தால், நம் தமிழகத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைய நிறைய வாய்ப்புகள் உள்ளதை உணர்ந்தேன். தனியாரிடம் அளித்தோ, அல்லது தமிழக அரசாங்கமே சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருவாயை பெருக்க தேவையான முயற்சிகளில் கவனம் செலுத்தாதது ஏன் என புரியவில்லை! வளர்ச்சி அடையாத கென்யாவிலேயே முடியுமானால், அதைவிட பன் மடங்கு வளர்ந்து எல்லா வசதிகளும் கொண்ட நம் நாட்டில் ஏன் முடியாது? நம் நாட்டு சுற்றுலாத்துறையினர் சிந்திக்க வேண்டும்.

English Summary:

"I was astonished to see the Kenya Safari tourism operating fleet of aircrafts from single seater, two Seater to 40 Seater. There is No Air strip, no runway, No ATC in these locations. Flights are landing on the sand ground and taking off. Fantastic safari tourism circuit. As soon as we land on the sand ground, Land Cruiser vehicles are waiting to take the tourists to the hotels, and then to safari.

There are three flight operators AirKenya, Regional Air Services, Aerolink operating to 20 locations for Safari such as Ambosell, Diani, Killimanjaro, Lamu, Lewa Down, Mallindi, Masai Mara, Meru, Nairobi, Narryuki, Samburu, NAkuru, Arusha, Dar-es-Salaam, Grumeti, Klein's Camp, Kogatende, Manyara, Ndutu, Sasakwa, Seronera, Zanzibar, Lobo, Bwindi Impenetrable Forest, Queem Elizabeth National Park, Murchison Falls. and Also in number of locations in Tanzania (Serengeti National Park, Ngorongora National Park).

Today flight services are available only from chennai to Madurai, Coimbatore, Trichy and Tuticorin. Intercity connectivity is not available.

I was thinking, why these kind of flight services are not implemented in spiritual tourism circuit interconnecting the places such as Rameshwaram, Kanyakumari, Velankanni, Nagapattinam, Tanjore, Chitambaram, Kanchipuram, Madurai, Thiruthani, Thiruvannamalai, Srivilliputhur, Palani, Thiruparangundram etc. Recreational tourism centers such ooty, Kodaikanal, Erkad, Kuttralam, Suruli, Moonar, Thekadi. And Business tourism such as Coimbatore, Madurai, Salem, Tutucorin, Chennai, Trichy.

What is holding us to promote Tourism through PPP or by TN Government itself?

It is the lack of vision? When it is possible in Kenya? Is it not possible in India?

We should think it over......" said by V.Ponraj (Advisor to Dr. A.P.J.Abdul Kalam)


பொன்ராஜின் கென்யா பயணம் - புகைப்பட காட்சிகள்:

Start Prev Next End

Keyword Tags »
abdulkalam, ponraj,kenya,india,tamilnadu,Ambosell, Diani, Chennai, Madurai, Coimbatore, Trichy, Tuticorin,Rameshwaram, Kanyakumari, Velankanni, Nagapattinam, Tanjore, Chitambaram, Kanchipuram, Madurai, Thiruthani, Thiruvannamalai, Srivilliputhur, Palani, Thiruparangundram,


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: