www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ பதவி ஏற்பு!

சங்கரன்கோவில் -  23-Mar-2012



சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி 94,977 வாக்குகளைப் பெற்றிட, மற்ற கட்சியான திமுக, மதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.



சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழக அமைச்சராகவும் இருந்த சொ.கருப்பசாமி கடந்த அக்டோபர் மாதம் மரணமடைந்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர். கடந்த 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,06,087. இதில் 1,59,772 வாக்குகள் பதிவாகியிருந்தன, வாக்குப்பதிவு 77.52 சதவீதம்.

முதல் சுற்றிலேயே அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 5713 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். அவருக்கு அடுத்ததாக திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 1917 வாக்குகளையும், மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 1182 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் 738 வாக்குகளையும் பெற்று பின்தங்கியிருந்தனர். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 18 சுற்றுகளின் முடிவில் 13 தபால் வாக்குகளையும் சேர்த்து அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி மொத்தம் 94,977 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 26,220. வாக்கு வித்தியாசம்- 68,757. மதிமுக 3-வது இடமும், தேமுதிக 4-வது இடமும் பெற்றன.


மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஜவகர் சூரியகுமார்(தி.மு.க)-26,220, சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க)- 20,678, க. முத்துக்குமார் (தே.மு.தி.க)- 12,144, எல். முருகன் (பா.ஜ.க)- 1633, ச. கணேசன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி டாக்டர் ஐசக் பிரிவு)- 355, கே.எஸ். நாகேஸ்வரராவ் (சமாஜ்வாதி கட்சி)- 277, சுயேச்சைகள் மா. அய்யனு- 152, எஸ். ஆறுமுகம்- 220, ப. உடையார்- 300, கோ. சங்கர்- 377, ச. பெருமாள்- 1324, பா. வெள்ளத்துரை- 1115.

டெபாசிட் இழந்த எதிர்க்கட்சிகள்:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையை பெற வேண்டுமானால் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் 1 பங்கு வாக்குகளைப் பெறவேண்டும். அந்த வகையில் சங்கரன்கோவில் தொகுதியில் மொத்தம் 1,59,772 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 6-ல் 1 பங்காக 26,626 வாக்குகளைப் பெற்றிருந்தால் டெபாசிட் தொகையைப் பெற முடியும். ஆனால், அதிமுகவை தவிர மற்ற வேட்பாளர்களால் இந்த வாக்குகளைப் பெற முடியவில்லை. அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர். தி.மு.க 406 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் தொகையை பெறமுடியவில்லை.

பேரவையில் 150 இடங்களுடன் அதிமுக

இடைத் தேர்தல் வெற்றியின் மூலமாக பேரவையில் 150 இடங்களை அதிமுக பெற்றுள்ளது. கட்சி வாரியாகப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை:

அதிமுக (பேரவைத் தலைவர் உள்பட) - 150

தேமுதிக - 29

திமுக - 23

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 10

இந்திய கம்யூனிஸ்ட் - 9

காங்கிரஸ் - 5

பாமக - 3

மனித நேய மக்கள் கட்சி - 2

புதிய தமிழகம் - 2

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் - 1

நியமன உறுப்பினர் - 1


முத்துசெல்வி பதவி ஏற்பு:

சட்டமன்றப் பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் முன்னிலையில் நேற்று தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் அறையில், சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.முத்துசெல்வி சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியேற்பு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

-செய்தியாளர்,
www.ithayakkani.com





கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: