www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சிலிர்க்கும் சிறுவன்!

சென்னிமலை -  2012-03-10 00:00:00.0ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த 'இதயக்கனி' வாசகர், எம்.ஜி.ஆர். விசுவாசி 'மெட்ரோ' கே. ஆர். சரவணகுமார். அவரது மகள் (ஸ்ரீ பிரியாவின் மகன்) வயிற்றுப் பேரன் அஸ்வத்.

அஸ்வத் பிறந்து குழந்தையாக இருந்த போது அவனைத் தூங்க வைப்பதற்காக எம்.ஜி.ஆர். பாடல்களை கேட்க வைத்திருக்கிறார் சரவணகுமார்.
'பெற்றால் தான் பிள்ளையா'-வில் இடம் பெற்ற 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி'. 'அரசிளங்குமரி'-யில் வரும் 'சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா'. 'நம் நாடு' படத்திலிருந்து 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் 'சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' போன்ற குழந்தைகளுக்கான பாடல்களைக் கேட்டதன் பலன், அஸ்வத் அந்த பாடல்களையும், எம்.ஜி.ஆரையும் சுவாசித்து வளர்ந்திருக்கிறான்.

நடை பயின்று, பேசத் துவங்கிய பின் எம்.ஜி.ஆர். பாடல்களைக் கேட்டு, தானே மழலையில் பாடுவதும், எம்.ஜி.ஆர். போல் நடித்து, நடனமாடுவதும் என்று கவனிக்கத்தக்க பிள்ளையாக மாறினான்.

'எங்க வீட்டுபிள்ளை'யில் 'நான் ஆணையிட்டால்' பாடலைப் பார்த்து அதில் தங்கவேலுவை எம்.ஜி.ஆர். பிடித்து தள்ளும் போது, அஸ்வத் தன் ஆத்தாவை (பாட்டி) பிடித்து தள்ளுவதும், 'ஆடி வா ஆடி வா' என்ற 'அரசகட்டளை' பாடலில் எம்.ஜி.ஆர். பரணில் தாவித் தாவிச் செல்வதைப் பார்த்து ஜன்னல் மீது ஏறி தொங்குவது, ' நான் ஆணையிட்டால்' பாடலிலும், 'தேடி வந்த மாப்பிள்ளை' யில் வரும் 'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' பாடலிலும் எம்.ஜி.ஆர். சோபாக்கள் நடுவே பாய்ந்து செல்வது, குதிப்பதைப் பார்த்து தானும் அப்படியே வீட்டிலுள்ள மேஜை, நாற்காலி, சோபாக்கள் மீது ஏறிக் குதித்து விளையாடுவது என்று அஸ்வத் செய்யும் வேடிக்கைகளைக் கண்டு குடும்பத்தினர் மகிழ்வர். அவன் டி.வி.யில் எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகள், படங்கள் பார்த்து தான் இவ்வளவும்.

ஜெயா டி.வி-யில் வரும் அதன் சின்னத்தைப் பார்த்து 'இரட்டை இலை' என்பான். அப்படிப் பார்த்து தான் எம்.ஜி.ஆரை 'மாமா' என்றும், ஜெயலலிதாவை 'ஆண்ட்டி' என்றும் அழைப்பது அவன் வழக்கம். யாரும் அவனுக்கு சொல்லித் தரவில்லை.

பள்ளியில் சேர்ந்த பின் முதலாமாண்டு (பிரிகேஜி) மாறுவேடப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்ற போது அவனுக்கு எம்.ஜி.ஆர். வேடம் போடலாம் என்று தாயார் ஸ்ரீபிரியாவும், தந்தை எம்.செல்வக்குமாரும் முடிவு செய்து, அதற்கான உடை, தொப்பி, கண்ணாடி விபரங்களை சரவணகுமாரிடம் சொல்லியிருக்கிறார்கள். சரவணகுமார் சென்னையிலுள்ள எம்.ஜி.ஆரின் உடையலங்கார நிபுணர் எம்.ஏ. முத்துவிடம் கூறி, அவர் ஏற்பாடு செய்து வரவழைத்திருக்கிறார்கள். அதன்படி வேடம் போட்டு எம்.ஜி.ஆர். போல் மேடைக்கு அஸ்வத் வந்த போது பெரும் வரவேற்பும், பாராட்டும் கிடைத்ததாம். மறு ஆண்டில் எல்.கே.ஜி. படித்த போதும் அதேபோல் வேடமிட்டு நடித்திருக்கிறான். 'ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே' என்று எம்.ஜி.ஆர். போல் பேசியிருக்கிறான். எம்.ஜி.ஆர். என்ற சக்தி எத்தனை தலைமுறைகளைக் கவர்ந்து வருகிறது என்பதற்கு அஸ்வத் ஒரு உதாரணம்.


இதயக்கனி வெளியிட்ட ஜெயலலிதா பிறந்தநாள் மலரிலிருந்து...

இது போல், உங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர் வேடத்தில் பொருத்தமாக இருந்தால் அனுப்பி வையுங்க இதயக்கனி மாத இதழில் பிரசுரிக்கப்படும்.

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

vlathangi10-Mar-2012

lets this boy become fame in this world may god blesshim .


Chandra10-Mar-2012

Aswath is great junior MGR. His actions like MGR. Congratulations to Aswath and his parents!