www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சென்னையில் குடியிருந்த கோயில்!

சென்னை -  2012-03-19 00:00:00.0கடந்த 5,மார்ச்-2012 திங்கள் முதல் 9,மார்ச்-2012 வெள்ளிவரை சன் டிவியில் 'எம்.ஜி.ஆர்., வாரம்' என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரின் ஐந்து படங்கள் இரவு 11.00 மணிக்கு ஒளிபரப்பாயின. அதில் கடைசியாக 'குடியிருந்த கோயில்' ஒளிப்பரப்பானது. அது முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் 16,மார்ச்-2012 முதல் 'குடியிருந்த கோயில்' திரையிடப்பட்டது.இங்கு பழைய திரைப்படங்கள் வெளிவருவது அபூர்வம். 'எங்க வீட்டுப்பிள்ளை', 'நாடோடி மன்னன்' படங்களுக்குபின் 'குடியிருந்த கோயில்' வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு 2011-ல் மே மாதம் 'நாடோடி மன்னன்' திரையிடப்பட்டது. அதற்கு பின் பெரிய குளிர்சாதன வசதியுடைய திரையரங்கான உட்லண்ட்சில் 'குடியிருந்த கோயில்' திரையிடப்படுவதை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை நகரிலுள்ள எம்.ஜி.ஆர். பக்தர்களெல்லாம் திரண்டு வந்து திரையரங்கைச் சுற்றி டிஜிட்டல் பேனர்களாகக் கட்டி பிரமிக்க வைத்து விட்டனர். அதில் 25 அடி உயர பேனர் ஒன்றும், 26 அடி உயர பேனரும் உண்டு. இரண்டையும் அமைத்த கலைவேந்தன் எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை பக்தர்கள் அதில் 'ஒளிவிளக்கு' எம்.ஜி.ஆர். தோற்றமுடைய பேனர் முழுவதையும் மாலைகளால் அலங்கரித்து அழகு படுத்தினர் பூக்கடை சக்தி' மாலைகளை தயார் செய்திருந்தார்.

18,மார்ச்-2012 ஞாயிறு மாலை இந்த ஒளிவிளக்கு பேனரின் கலைவேந்தன் பக்தர்கள் சாந்தா, வேலு, வேதா, தேவா, என்று ஐந்து பேர் ஏறிக்கொண்டு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்குமம், பன்னீர் என்று 11 விதமான அபிஷேகங்கள் செய்ய, அதை வேடிக்கை பார்ப்பதற்கு சாலையெங்கும் மக்கள் திரள, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள், வேன்களில் சென்ற இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் இந்தக் காட்சிகளை ஆர்வத்துடன் படம் பிடித்துச் சென்றனர். இசைக் குழுவினர் இசைத்தபடி அந்த இடத்தை பரப்பரபாக்கினர். பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர், இணையதள செய்தியாளர்கள் பெரும் திரளாக வந்து திரையரங்கு முன்புற கோலாகலங்களை படம் பிடித்து, பக்தர்களை பேட்டி கண்டனர்.
படம் திரையிடப்பட்டதும் ஆரம்பம் முதல் இறுதி வரை எம்.ஜி.ஆர். திரையில் தோன்றும் போதெல்லாம் மலர்தூவி மகிழ்ந்தனர். 'நீயே தான் என் மணவாட்டி' ஒன்ஸ்மோர் திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர். என்ற பெயரும், சக்தியும் சாதாரணமா?

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

vlathangi22-Mar-2012

dr purachith thalaivar still lives in our heart.


Chitlapakkam sundararajan22-Mar-2012

Now a days the directors are remaking MGR's films.For example,Sakalakala vallavan is the remake of Periyaidathuppen.Thasavatharam's basic idea is the Ulagamsutrum Valiban's story.'Thoongathey thambi thoongathay' is the remake of Kudiyiruntha koil.Pudiya Mugam is the copy film of Aasai Mugam.The tunes of MGR's songs are also copied.Ilayaraja's Kadalila alaigal Mayangudu mayangudu' is the copy of 'Tharaimel Pirakkavaidan' padakotti song.Kanney kalaimanay is the copy of "Andavan Ulagathin Mudalali' song.Ponmanathedi nanum poovodu vantheyn song is the copy of Pattukku patteduthu song(padakotti).Surya's film Adavan is the copy of Idhayaveenai film and so on. So MGR is the God father of Tamil Cinema.If doubt arises please contact me in the cell no.8428268742.


Chandra21-Mar-2012

MGR cinema eppothu vanthalum yen 30 varudankalukku pin vanthalum perumai than MGR avarkaluku. MGR is ever green. After 50 years also MGR's film would be evergreen


D.Sundararajan20-Mar-2012

MGR'S Films are not an ordinary films.It is a basic study to the newly coming directors and actors.He was not dead.Still he is living in the heart of all people.


krishnan20-Mar-2012

M.G.R.'s every films are a lesson for all. his films give energitic and happiness to all people including his fans. so we ( mgr's baktharkals) are always waiting for the evergreen master MGR's films.


G. Chandrasekar, Adambakkam20-Mar-2012

Ithayakkani.com is always in the forefront in publishing/posting any news/article wherever happens in connection with our Thalaivar. After launching the wonderful website exclusively for Puratchi Thalaivar we need not to wait till first week of every month (till ithayakkani magazine reaches the shops) unlike earlier for such news and artilce. Thankyou very much for posting such a nice article immediately. The once more song was ?Ennai Theriyuma? and not ?neeye than enakku manavatti?.