www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

செயற்கை கருவுக்கு எதிர்ப்பு!

வாடிகன் சிட்டி -  29-Feb-2012



செயற்கை முறையில் கரு உருவாகுதலைத் தடை செய்ய வேண்டும் என்று போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

"செயற்கை முறையில் கரு உருவாக்குதலைத் தடை செய்ய வேண்டும். தம்பதிகளின் இயற்கையான இணைவின் மூலமே மனித உயிர்கள் உருவாகவேண்டும்.



செயற்கை முறையில் கரு உருவாதல் வியாபாரமானது மோசமான ஒன்று. படைப்பு தொழிலை அது எடுத்துக்கொள்கிறது. இயற்கையான முறையிலான கருத்தரித்தலில் தம்பதிகளுக்கிடையே உயிரியல் ரீதியாக மட்டுமல்லாது, ஆன்மிக ரீதியாகவும் அன்பு பரிமாறிக் கொள்ளப்படும். அதே சமயம் மலட்டுத் தன்மை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

ஐ.வி.எப் (In Vitrio Fertilization) எனப்படும் வெளிச் சுழி நிலையில் செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு, பின்னர் கருப்பையில் கரு வளர்க்கப்படும் முறைக்கு போப்பாண்டவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: