www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ஜெயலலிதா பிறந்தநாள் ஸ்பெஷல்!

சென்னை -  2012-02-29 00:00:00.0படிப்பு, விளையாட்டு என்று எதிலும் முதலிடம் பெற்ற ஜெயலலிதா சிறுமியாக இருந்த போதே மேடையில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நடிகர் எம்.ஜி.ஆரிடம் தனிப்பட்ட பரிசினைப் பெற்றிருக்கிறார். இவரது நடன அரங்கேற்றம் நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் நடைபெற்ற போது, அவரால் 'தங்கச்சிலை' என்று அழைக்கப்பட்டார்.திரைப்பட நடிகையாக தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என்று முன்னணி நடிகர்களுடன் மட்டுமின்றி அடுத்த நிலையில் இருந்த முத்துராமன், சிவகுமார், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவி.எம்.ராஜன் மற்றும் தெலுங்கில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கன்னடம் மற்றும் இந்தியில் தர்மேந்திரா,- இப்படி பலருடன் ஜெயலலிதா நடித்தார். 'திருமாங்கல்யம்' அவரது 100 வது படம். 'நதியை தேடி வந்த கடல்'-அவரது 127-வது கடைசி படம். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். எத்தனை மொழிகளில் நடித்தாரோ, அத்தனையிலும் சொந்தக் குரலில் பேசியவர்.சினிமாவில் நடுவில் நடிக்காத போது 'துக்ளக்' ஆசிரியர் சோ கேட்டுக் கொண்டாரென்று தொடர் கட்டுரைகள் எழுதிய ஜெயலலிதா, 'குமுதம்' இதழில் தொடர்கதைகளும் எழுதினார். 'பொம்மை' இதழில் 'அழகுக்கலை' பற்றி எழுதியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கொள்கை பரப்பு செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், மாநில சத்துணவு திட்ட அமைப்பாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். எம்.ஜி.ஆர் அமரரானபின் அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டது. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இருந்ததை 1989 - தேர்தல் தோல்விக்குப்பின் - ஒரே அணியாக இணைத்து அ.தி.மு.க.வை பலமிக்கதாக்கினார். 1991 - தேர்தலில் நின்று பெரும் வெற்றி கண்டார். 1996-ல் தோல்வி, 2001-ல் வெற்றி, 2006-ல் தோல்வி, 2011-ல் வெற்றி என்று சளைக்காமல் அவரது பயணம் தொடர்கிறது.

கட்சிக்கும், ஆட்சிக்கும் தன் உடன் பிறவா தோழி சசிகலாவால் பிரச்னை என்றதும் அந்த குடும்பத்தினர் அனைவரையும் தூக்கி எறிந்த ஜெயலலிதாவின் மனத்துணிவு சாதாரணமானதல்ல.எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா நடித்து வெளிவராத படத்தின் ஒரு காட்சி


பிரான்ஸ் நாட்டில் ஜெயலலிதா தபால் தலை:ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 'பிரான்ஸ் எம்.ஜி.ஆர் பேரவை' ஜெயலலிதா தபால் தலை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் இந்த அமைப்பின் கடந்த மூன்று வருடங்களாக எம்.ஜி.ஆருக்கு தபால் தலை வெளியிட்டு வருகின்றனர்.

செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

selvam 08-Nov-2018

arumai. ammavukku yen valththukkal


MURUGU BATMANABIN FRANCE M G R PERAVAI03-Mar-2012

Thank you very much for the special magasine released by ITHAYAKKANI for "AMMA"s birth day.This year we are also celeberated AMMA"s birthday in PARIS and released AMMA stampe. Many more thanks toAMMA for the action of PURIFIED our Party.One more thanks to our VIJAYAN sir for connecting all original followers of our beloved "MANITHA PUNITHAR M.G.R " all over the world.


appavi01-Mar-2012

எல்லாம் ஓகே தான் தமிழ்நாட்டுல கரண்ட் இருக்கா...


vlathangi01-Mar-2012

thanks for reading this details. wonderful details this amazing magazine have done a gud job. thanks for sharing in my group.


G. Chandrasekar, Adambakkam29-Feb-2012

புரட்சித்தலைவரின் உண்மையான வாரிசு புரட்சித்தலைவி அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க. தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் இனி அவரைத்தவிர வேறொருவருமில்லை.