www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தமிழகத்தில் கம்ப்யூட்டர் கல்வி!

சென்னை -  2012-03-07 00:00:00.0



தமிழகத்தில் கல்வி தொடர்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்த தகவல் தொழில் நுட்ப நிறுவனமான 'மைக்ரோசாஃப்ட்(MICROSOFT)' முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக, தன்னை செவ்வாய்க்கிழமை சந்தித்த அந்த நிறுவனத்தின் தலைவர் ஜீன் பிலிப் கோர்டோசிடம், முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.




இந்தச் சந்திப்பின் போது, கடந்த 2005-ம் ஆண்டில் தமிழக அரசுக்கும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியை அளிப்பதற்கு வழி செய்கிறது. இதைத் தொடர்ந்து, மேலும் பல கம்ப்யூட்டர் தொடர்பான கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதுகுறித்தும் முதல்வரிடம் விளக்கப்பட்டது.

உயர் கல்வி நிலையில் தகவல் தொழில் நுட்பம் சாராத ஆசிரியர்களுக்கு அதுகுறித்த கற்பிக்கும் ஆற்றலை வளர்ப்பது, குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய அறிவை வளர்த்து, உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கற்பிக்கச் செய்வது, புதிய உத்திகள் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் தொழிலதிபர்களை மாணவப் பருவத்திலேயே கண்டறிவது உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த இருப்பத்தாக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோர்டோஸ் விளக்கினார்.

மென் பொருள் உள்பட தகவல் தொழில் நுட்பம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் வகையில் கம்ப்யூட்டர் மையங்களை தமிழகத்தில் அமைக்கவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் முழு ஒத்துழைப்பு தரப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.


-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: