www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தமிழக பட்ஜெட் 2012-2013!

சென்னை -  2012-03-26 00:00:00.0தமிழக அரசின் 2012-2013 ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று (26 மார்ச்,2012) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1500 கோடி ரூபாய்க்கு புதுவரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் வருமானத்திற்கு பெரும் ஆதாரமாக விளங்கும் 'டாஸ்மாக்' மதுபானங்களின் விற்பனையைப் பெருக்க அவற்றின் மீது 14.5 வரி விதிக்கப்பட்டுள்ளது.வாகனங்களின் பதிவு எண்கள் பேன்ஸியாக இருக்க வேண்டுமென்றால் இனி 14 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். சமையல் எண்ணெய் விலை உயரும்.

இது ஒரு பக்கமென்றால் சலுகைகளுக்கு பஞ்சமில்லை. சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளானவர்கள் பயன்படுத்தும் இன்சுலின்(ஊசி) மருந்து, கோதுமை, ஓட்ஸ், கையால் செய்யப்படும் பூட்டு, ஹெல்மெட் இவற்றுக்கு மதிப்பு கூட்டு வரி நீக்கப்படுகிறது.

மின்சக்தியால் இயங்கும் இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 14.5 % லிருந்து 5 %, தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மரப்பட்டைக்கு 14.5 % லிருந்து 5 %, சானிட்டரி நேப்கின்களுக்கு 14.5 % லிருந்து 5 %, என்று வரி குறைக்கப்பட்டுள்ளது.

அன்னதானத் திட்டம் மேலும் 50 கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. பழனி முருகன் கோவிலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் தினமும் காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் மூலம் 1,00,553 வீடுகள் கட்டித்தரப்படும்.

2011 முதல் 2015 வரை ஏழைகளுக்கு சூரிய சக்தி மின்வசதி கொண்டு 3 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். தலா 1.8 லட்சம் மதிப்புடைய வீடுகள் ஆண்டுக்கு 60 ஆயிரம் வீதம் கட்டித்தரப்படும். இது போன்ற குடியிருப்புகளுக்கு புதிய நீர்நிலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

10 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

1 லட்சம் குடும்பங்களுக்கு 240 கோடி ரூபாயில் வெள்ளாடுகள் வழங்கப்படும்.

வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ரூ. 150 கோடி செலவில் விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. அதே போல் இதே வகுப்புகளின் மாணவ- மாணவியர் அனைவருக்கும் (81 லட்சம் பேர்) ரூ 100 கோடி செலவில் விலையில்லா காலணிகள் வழங்கப்படும்.

6-ம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கமீஸும் 4 ஜோடிகள் வழங்கப்படும்.

அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கு 1500 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிகணினி (லேப்-டாப்) வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் வீட்டு வசதி கடன் ருபாய் 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ஓய்வூதிய தாரர்கள் இறக்கும் போது வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரம் ரூபாய் இனி 35 ஆயிரமாக வழங்கப்படும்.

இலங்கை அகதிகளுக்கு 25 கோடி ரூபாயில் 2500 வீடுகள் கட்டித்தரப்படும்.

35 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும்.

193 கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் 37 இடங்களில் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு உதவி மையம் அமைக்கப்படுகிறது.

2012-ம் ஆண்டில் அரிசி போன்ற உணவுப் பொருட்களுக்காக மட்டும் 4900 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு 1 லட்சம் வீட்டு மனைகள் வழங்கப்படுகிறது.

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இந்த தொகை அளவில் ஏழைகள் சிகிச்சை பெறலாம்.

உளுத்தம் பருப்பு, பாமாயில், மிளகாய், புலி போன்ற உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளில் அடக்க விலைக்கு விற்கப்படும்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 'தானே' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அங்கு முந்திரி, தென்னை போன்ற பயிர்கள் வளர்ப்பதற்கு 790 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.பட்ஜெட் முழுவதையும் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்து முடிக்கையில், தி.மு.க சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின், பேச எழுந்த போது அவருக்கு பேச அனுமதி தரப்படாததால், அவருடன் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது மு.க.ஸ்டாலின், "பட்ஜெட் என்பது ரகசியம் காக்கப்பட வேண்டியது, அது பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பே முதல்வர் வெளிப்படுத்தியது தவறான முன்னுதாரணமாகும்" என்று விமர்சித்தார். சமத்துவ மக்கள் கட்சி (சரத்குமார்), இந்திய கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகள் பட்ஜெட்டை குறை கூறி விமர்சித்துள்ளனர்.

பட்ஜெட் மதிப்பீடு (கோடியில்)


வருவாய் வரவுரூ. 1 லட்சத்து 590
வருவாய் செலவுரூ. 98 ஆயிரத்து 214
மூலதனச் செலவுரூ. 20 ஆயிரத்து 856
வருவாய் உபரிரூ. 2 ஆயிரத்து 376
நிதிப் பற்றாக்குறைரூ. 19 ஆயிரத்து 832
பட்ஜெட் அளவுரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்து 422
மொத்தக் கடன் சுமை1 லட்சத்து 35 ஆயிரத்து 60


-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: