www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தமிழரான பல் மருத்துவரின் சாதனை!

சென்னை -  2013-08-25 00:00:00.0



ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் அப்துல்லா- ஷரீபா தம்பதிகள். இவர்களுடைய மகள் சுபிரா (வயது 10). இவளுக்கு முக குறைபாடு நோயினால் இடது பக்க முகம் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இதனை சீரமைக்க வேறொரு மருத்துவமனையில் நவீன கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் சிறுமிக்கு அந்த சிகிச்சை பயன் அளிக்கவில்லை.



தாடையின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட கருவி சிகிச்சை பழமையானதுடன், முகத்தில் தழும்புகளையும் ஏற்படுத்தக்கூடியது என்பதால், இவளுடைய பெற்றோர்கள் சென்னையில் உள்ள பல் மற்றும் முகச்சீரமைப்பு நிபுணர் பேராசிரியர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியை, குழந்தையுடன் வந்து சந்தித்தனர்.

முகச்சீரமைப்பு சிகிச்சை:

சிறுமியின் முகத்தை நன்கு பரிசோதித்த் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி, "முப்பரிமாண சிபிசிடி ஸ்கேன்" மூலம் தாடைகளின் அமைப்பினை ஆய்வு செய்த பின்னர், சிறுமியின் முக அமைப்பினை சீர் செய்ய "புளோட்டிங் போன் டெக்னிக்" என்ற அதிநவீன அறுவை சிகிச்சை முறையை திட்டமிட்டார்.

அதிநவீன சிகிச்சை மூலம் சிறுமிக்கு புதிய எலும்பை வளரச்செய்து அதனை பற்களின் இயல்பு நிலைக்கு ஏற்ப, திறமையாக கையாண்டு முகத்தின் குறைபாடு சீர் செய்யப்பட்டது. இந்த அரியவகை அறுவைசிகிச்சை, முறைப்படி கீழ்த்தாடையின் வளர்ச்சி குன்றிய பகுதியில் ஒரு சிறுபிளவினை ஏற்படுத்தி, தாடைகள் மற்றும் பற்களை இயல்பு நிலையில் பொருத்தி அதற்கு ஏற்ப எலும்பை வடிவமைத்து, சிறுமியின் இடது பக்க முகக் குறைபாடு சீரமைக்கப்பட்டது.

குறிப்பாக அதிநவீன எலும்பு புரதத்தை பயன்படுத்தி, புதிய எலும்பு ஏதுவாக வளரச் செய்து, முழுமையான தாடை வளர்ச்சி திருத்தம் செய்யப்பட்டது. இதனால் அவளது முகம் சிகிச்சையின் முடிவில் சமச்சீராக விளங்கியது.



டாக்டருக்கு நன்றி:

உலகிலேயே ஒரு சில அணுபவமிக்க முகச்சீரமைப்பு நிபுணர்கள் மட்டுமே பின்பற்றும் கடினமான அறுவைச் சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சையின் முடிவு நிரந்தரமானது மற்றும் எந்தவித பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது.

அந்த சிறுமியின் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் முகத்தை சீரமைத்த டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ஆப்பிரிக்கா சென்றனர்.

மேலும் மருத்துவமனை விபரங்களுக்கு, >>> www.smbalaji.com



Keyword Tags »
chennai, dr.s.m.balaji, chennai doctor, africa girl, dental and craniofacial


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

G. Chandrasekar, Adambakkam26-Aug-2013

Hats off to you, Doctor. I feel very proud being fellow Indian/Tamizhan.