www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

நிலைமை சீராகாத இலங்கை!

கொழும்பு -  17-Mar-2012



"போருக்குப் பிந்தைய அமைதி, நல்லிணக்கம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டுவரும் நிலையில், இலங்கையில் மீண்டும் பழைய சோகங்கள் திரும்பாதபடி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.



"தண்டனையில் இருந்து தப்பிக்கும் போக்கிலிருந்து மாறி, குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் வகையிலான நீதியும் உண்மையும் வலியுறுத்தப்படவேண்டும்" என்று சம்பந்தன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

"2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழர்களிடம் நல்லிணக்கம் ஏற்படுத்தும் அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியிலான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசு இது வரை மேற்கொள்ளவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 32 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் 10 பேரின் உடல்கள் கொலை செய்யப்பட்டதற்கான தழும்புகளுடன் கிடைத்திருக்கின்றன. வடக்குப் பகுதியில் வசிக்கும் தமிழ்ப் பெண்களை துணை ராணுவக் குழுக்கள் தங்களது பாலியல் விருப்பங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

பெண்களைப் பலவந்தப்படுத்தி வடக்கில் முகாமிட்டிருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இனப் பரவலைச் சீர்குலைக்கும் நோக்கில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியிருப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது; ராணுவ தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அரசு அதிகார வர்க்கத்தில் இருந்து தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று சம்பந்தன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

போருக்குப் பிந்தைய நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் வலியுறுத்தியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மீண்டும் கிளர்ச்சி ஏற்படும் என்பது பல நாடுகளில் நடந்த இனப் பிரச்னைகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.


-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: