www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

பினாங்கு துணை முதல்வரின் தமிழ்பற்று!

சென்னை -  2013-09-17 00:00:00.0



இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அதைத் தடுக்கத் தவறிய, 'உண்ணாவிரதம் இருக்கிறேன்' என்று மூன்று மணி நேரம் போக்கு காட்டி 'இலங்கையில் போர் நின்று விட்டது' என்று வீட்டிற்கு பறந்த கருணாநிதி இன்று இலங்கையில் தமிழினம் சீரழிகிறதே என்று உலக மகா நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.



கருணாநிதியின் திரை மறைவு சதியில் சிக்கி இன்று இந்தியாவுக்கு வர முடியாமலிருப்பவர், மலேசிய மண்ணிலுள்ள தமிழ் உணர்வாளர்களில் முக்கியமானவர் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பினாங்கு ராமசாமி.

பினாங்கு ராமசாமி இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறையும், தமிழினத்திற்காக போரிட்ட விடுதலைப்புலிகள் மீது பற்றுதலையும் வெளிப்படுத்தியவர், வெளிப்படுத்தி வருபவர். அது இந்திய அரசின், குறிப்பாக கருணாநிதியின் கண்களை உறுத்தியது. உலக தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதலிடத்திலும், கடைசி இடத்திலும் தானே இருக்க வேண்டும் என்று 'நடிப்பில்' முதலிடத்தில் இருப்பவர். தன்னைத் தாண்டி அந்த இடத்திற்கு யாரும் வந்து விடக் கூடாதென்று மிக மிக தெளிவாக இருந்து போட்டியிடுபவர் கருணாநிதி. அதனாலேயே பேராசிரியர் ராமசாமி உலகில் எந்த பகுதிக்குச் சென்றாலும் இந்தியாவிற்கு, முக்கியமாக தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று திட்டமிட்டு வெளியுறவுத்துறையில் ஆணி அடித்தவர் அவர். இப்போது கருணாநிதியின் நிலை அரசியலில் கேள்விக் குறியாக இருப்பதால் அவரது சதிச் செயல்கள் இனி எடுபடாது. அவருக்கு இது நாள்வரை அரசியலில் துணை நின்றவர்களும் எடுபட மாட்டார்கள். பேராசிரியர் ராமசாமி விரைவில் இந்தியாவுக்கு வர முயற்சிகள் நடைபெறுகிறது.

கடந்த ஆகஸ்ட் 8, 2011ல் சென்னையில் 'இதயக்கனி' இதழ் சார்பில் 'எம்.ஜி.ஆர். விரும்பிய தமிழ் ஈழம் மலரச் செய்வோம்' என்ற தலைப்பில் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நடத்திய போது- அதில் பேராசிரியர் ராமசாமி கூறிய, 'தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி' என்ற குற்றச்சாட்டையும் பதிவு செய்தோம். இதையெல்லாம் கடந்த 11-9-2013 அன்று பினாங்கிலுள்ள 63 மாடி கட்டிடத்தில் உள்ள துணை முதல்வரின் அலுவலகத்தில் (52வது மாடி) சந்தித்து பேராசிரியருக்கு சால்வை அணிவித்து பேசிய போது நினைவு கூர்ந்தோம். தமிழர்கள் நல்வாழ்வு,உலகளாவிய தமிழர்கள் பண்பாடு, கலாசாரம் பற்றி பல விஷயங்களை அவரோடு பகிர்ந்த போது அமரர் எம்.ஜி.ஆர்., மீதும், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதும் அவரது பார்வையும் கரிசனமும் ஈர்ப்புடையதாய் இருந்தது.


தொடர்புடைவை: 1. கருணாநிதி போற்க்குற்றாவளி - ராமசாமி சொன்னதை இதயக்கனி ஆசிரியர் வாசித்த தொகுப்பு வீடியோவில் உள்ளது 2. மலேசியாவில் பினாங்கு ராமசாமி வெற்றி!

Keyword Tags »
malaysia, tamilan, tamilnadu, penang, penang deputy cm


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

G. Chandrasekar, Adambakkam26-Sep-2013

We should feel very proud of such exceptional personalities. I pray the almighty to give him good health and long life.


Prince Rajsekera19-Sep-2013

I thank Penang Deputy Chief Minister Ramasamy for the interest shown by him for the freedom of Singai Empire (Ceylon)Tamils