www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மேட்டூர் அணைக்கு 75 வயது!

சென்னை -  05-Mar-2012



தமிழக முதல்வர் ஜெயலலி 3,மார்ச் அன்று தலைமைச் செயலகத்தில், மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டபட்டுள்ள பவள விழா நினைவுக் கோபுரத்தை காணொளிக் காட்சி (Video Conferencing) மூலமாக திறந்து வைத்தார்.



சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் 16.50 லட்சம் பாசன நிலங்களும் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள சுமார் 45000 ஏக்கர் பாசன நிலங்களும் காவேரி ஆற்றின் நீரினால் மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. பொதுப் பணித் துரையின் மைல் கல்லான மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெருவதையோட்டி, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவளவிழா நினைவுக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

இப்பவளவிழா நினைவு கோபுரம் தரைதளம் உள்ளிட்ட ஏழு தளங்களைக் கொண்டதாகும். பவளவிழா கோபுரத்தின் தரைதரலத்தின் முன்பகுதியில் வாகனகளை நிறுத்துவதற்கும், அதன் அடுத்த பகுதியில் பார்வையாளர்கள் உள்ளே சென்று பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்ளே, மேட்டூர் அணையின் பழங்கால கட்டுமானப் பணிகளை சித்தரிக்கும் படங்கள், அருங்காட்சியகம், மேட்டூர் அணை தொடர்பான புத்தகங்கள், வரைபடங்கள் அடங்கிய நூலகம் போன்ற பகுதிகள் கூடாரம் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தரைதளத்திலிருந்து 75 அடி உயரமுள்ள மேல்தளத்திற்கு 6 நபர்கள் செல்லக்கூடிய வகையில் மின் தூக்கி வசதியும், படிக்கட்டு வசதியும் செய்யப்பட்டுள்ளன. இப்பவளவிழா நினைவுக் கோபுரத்தின் ஆறாவது தளத்தில் பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் நின்று மேட்டூர் அணையின் தோற்றத்தையும், நீர்த்தேக்கத்தின் நீர்ப்பரப்பு காட்சிகளையும், 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட லேடி பெட்ரிக் ஸ்டான்லி பூங்காவையும் கண்டு மகிழும் வகையில் வட்ட வடிவில் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 75 ஆண்டு நிறைவு விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள பவளவிழா நினைவுக் கோபுரத்தை 3 மார்ச்-ல், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி (Video conferencing) மூலமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பொது பணித்துறைச் செயலாளர், அரசு ஆலோசகர் (நீர்வள ஆதாரம்) மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: