www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ராகுலின் எடுபடாத அரசியல்!

புதுதில்லி -  07-Mar-2012



நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வழியில்லாமல் மக்கள் ஓங்கி அடித்திருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா என்று குடும்பமே முகாமிட்டு என்னென்னவோ பேசிப்பார்த்தார்கள்.



'உன் மூஞ்சியைப் பார்ப்போம், ஓட்டுப் போட மாட்டோம்' என்று முகத்திலறைந்து சொல்லி, காங்கிரஸூக்கு 4-வது இடத்தை போனால் போகிறதென்று தந்திருக்கிறார்கள். பஞ்சாபிலும், கோவாவிலும் காங்கிரஸை எட்டி உதைத்து வெளியேற்றியிருக்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்திய அரசியலையே கோளாறாக்கும் வேலையை நேரு தொடங்கி வைத்தார். மகள் இந்திரா காந்தி அதை பெரிது படுத்தினார். மகன் ராஜீவ் காந்தி அம்மா அளவுக்கு மோசமில்லை. ஆனால் அவரையும் செயல்படவிடவிலை. இப்போது சோனியா, மாமியாரை மிஞ்சிய மருமகளாக அரசியலையும், ஆட்சியையும் நாசம் செய்து கொண்டிருக்கிறார். அதன் விளைவு அந்த குடும்பம் ஆனந்த பவனிலேயே இனி முடங்கிக் கிடக்கலாம்.

உத்தரபிரதேசத்தில் அமேதி, ரேபரேலி காங்கிரஸின் கோட்டையாக நேரு குடும்பத்திற்கு இதுவரை கை கொடுத்து வந்தது. இப்போதைய தேர்தலில் அமேதியின் 5 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. ரேபரேலியின் 5 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆக அமேதியும், ரேபரேலியும் கை விரித்து விட, இனி ராகுல் காந்தி கூழ் குடிக்க எங்கே போவார்?

உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ், ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகிறார். அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. அவரது மகன் அகிலேஷ் யாதவ் தந்தைக்கு பெரும் வெற்றியைத் தேடித்தர பாடுபட்டுள்ளார். அத்தோடு நிற்கட்டும். குடும்ப அரசியல் உ.பி.யிலும் குட்டையைக் குழப்பாமல் இருக்க வேண்டும்.



5 வட மாநில தேர்தல் நிலவரங்கள்:

உத்தர பிரதேசம்
கட்சிமொத்தம்
சமாஜ்வாதி224
பா.ஜ.க47
காங்கிரஸ் கூட்டணி38
பகுஜன்80
மற்றவை14
மொத்தம்403


பஞ்சாப்
கட்சிமொத்தம்
அகாலி தளம்56
காங்கிரஸ்46
பா.ஜ.க12
மற்றவை3
மொத்தம்117


உத்தரகாண்ட்
கட்சிமொத்தம்
பா.ஜ.க31
காங்கிரஸ்32
பகுஜன் சமாஜ்3
மற்றவை4
மொத்தம்70


மணிப்பூர்
கட்சிமொத்தம்
காங்கிரஸ்42
அனைத்திந்திய திரினாமூல் காங்கிரஸ்7
மற்றவை11
மொத்தம்60


கோவா
கட்சிமொத்தம்
பா.ஜ.க21
காங்கிரஸ்9
எம்.ஜி.பி3
மற்றவை7
மொத்தம்40


-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: