தான் எழுதிய 'அம்மாவின் கைபேசி' நாவலை திரைப்படத்திற்கு ஏற்றார் போல் கதைக்களம், தொழில் நுட்பம், உருவாக்கும் விதம் ஆகியவற்றில் புதிய பாணியில் உருவாகி வருகிறது.
கதையின் நாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடிக்க, செல்வி எனும் கதாபாத்திரத்தில் இனியா ('வாகை சூட வா' அறிமுகம்) நடிக்கிறார். இவர்களுடன் மிக முக்கியமான அம்மா வேடத்தில் பிரபல நடிகை மீண்டும் நடிக்கிறார்.
இத்துடன் திரைக்கதையின் முக்கிய பாத்திரங்களுக்காக எழுபத்தைந்து புதிய நடிகர் நடிகைகளை பல துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முறையான நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக நெய்வேலி மற்றும். மேட்டுரில் முக்கியமான இடங்களில் இருபத்தைந்து நாட்கள் நடைபெற்று முடிந்தன.
அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி முழுப் படமும் நிறைவடைகிறது. இப்படத்தின் மூலம் இந்தி திரைப்பட இசைஅமைப்பாளர் ரோஹித் குல்கர்னி தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். படத்தொகுப்பை கிஷோர் கையாளுகிறார். பாடல்கள் நாமுத்துகுமார். ஒளிப்பதிவு கருப்பையா, பிரபு தயாளன்; திரைக்கதை, உரையாடல், ஒளிப்பதிவு இயக்கம் தங்கர்பச்சான்.
படத்தின் புகைப்பட காட்சிகள்:






மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani on Facebook, Twitter,
-செய்தியாளர், www.ithayakkani.com |