www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

கர்ணன் படத்தின் டிரைலர் வெளியீடு!

சென்னை -  06-Mar-2012



'கர்ணன்' டிரைலர் வெளியீடு-சென்னையில் பிரமாண்ட விழா,படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் பங்கேற்பு!

"எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகிய இரு பெறும் நடிகர்களின் பட பெயர்களை யாரும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்தார் (ஆனால் தான் நடித்த படமொன்றுக்கு ராமன் தேடிய சீதை என்று எம்.ஜி.ஆர் பட தலைப்பை பெரு முயற்சி எடுத்து வைத்த முரண்பாட்டிற்கு என்ன பெயர்? சேரன் தான் விளக்கம் சொல்ல வேண்டும்).



டிரைலர் வெளியீட்டின் போது வி.என்.சிதம்பரம், இயக்குனர் வி.சி.குகநாதன், ராஜ் டி.வி. ரவீந்திரன், பி.சுசிலா, எல்.சுரேஷ், மாஸ்டர் ஸ்ரீதர், ஒய்.ஜி. மகேந்திரன், ராம்குமார், பி.ஆர். விஜயலட்சுமி, பி.ஆர். ரவிசங்கர், சொக்கலிங்கம், திவ்யா சொக்கலிங்கம்.


சிவாஜி கணேசன் நடித்து 1964-ம் ஆண்டில் வெளியான படம் 'கர்ணன்'. இந்தப் படத்தை திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம், டிடிஎஸ் தொழில் நுட்பத்துடன் நவீனமாக மெருகேற்றி இருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் 21-பிப்ரவரி,2012 காலை நடந்தது.



டிரைலரை சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் வெளியிட, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) செயலாளர் எல்.சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

விழா நிகழ்ச்சிகளை இயக்குனர் சேரன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில் 'கர்ணன்' படத்தில் பணிபுரிந்த பழம்பெறும் நடிகர்கள் வி.எஸ்.ராகவன், சண்முகசுந்தரம், மாஸ்டர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி, பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ், பாடகி பி.சுசீலா மற்றும் இயக்குனர்கள் வி.சி.குகநாதன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், ரகுநாதன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன், 'கர்ணன்' படத்தை இயக்கிய பி.ஆர். பந்துலுவின் மகன் பி.ஆர்.ரவிசங்கர், மகள் பி.ஆர்.விஜயலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



(விழாவின் தொடக்கத்தில் "கர்ணன்" படத்தின் டிரைலருடன், படத்தில் இடம் பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' (சீர்காழி கோவிந்தராஜன் பாடியது), 'இரவும் பகலும் மலரட்டுமே' (டி.எம்.எஸ்.-பி.சுசீலா பாடியது), 'கண்கள் இங்கே நெஞ்சமும் எங்கே', 'கண்ணுக்கு குலமேது' என்ற பி.சுசீலா பாடிய பாடல்களை திரையிட்டனர். விழாவில் பி.சுசீலா பேசிய போது மேற்குறிப்பிட்ட பாடல்களை பாடிக்காட்டினார்).

படத்தின் டிரைலர் காட்சி:



-சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: