www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தமிழர்களின் பெருமைக்கு 'மகா வம்சம்'!

சென்னை -  22-Feb-2012



உலகின் ஒவ்வொரு வளர்ந்த நாடுகளின் மேம்பாட்டிலும், வளரும் நாடுகளின் முன்னேற்றத்திலும் இன்று வரை தமிழன் இருக்கிறான். இந்த வரலாற்று உண்மையை 'மகா வம்சம்' என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார்கள் போகஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தார்.

ரகுமான், ஹிம்ஸ், பிரியா, ஹென்றி, ரவி சுந்தரலிங்கம், மனோன்மணியன், கீர் ரகுமான் ஆகியோர் நடிக்கிறார்கள். 1900 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிஜ சம்பவமே கதை.

பல்லவர்களும், சோழர்களும் தீவுக் கூட்டங்களில் கால் வைத்து வீரம் விளைந்தது. பல்லவர் செல்வாக்கு ஓங்கி வளர்வதற்கு முன், பண்டைய மலேசிய பூமியில் மலாய் அரசாட்சியை உருவாக்கியவன் தான் மாறன் மகாவம்சன். வீரன் கப்பலோட்டுவதில் வல்லவன், கோவா சென்ற மாறன் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவனோடு சண்டையிட வேண்டிய சூழ்நிலை. சுந்தரின் தங்கை யசோதாவுடன் காதல், சண்டையில் மாறன் வெற்றி பெற்று சுந்தரை வீழ்த்துகிறான்.




மாறனின் வீரத்தை நேரில் கண்ட ரோமாபுரி இளவரசன் மார்கஸூக்கு மாறன் தன்னுடன் இருந்தால் நல்லது என்று அழைக்கிறான். நிர்ப்பந்தம் காரணமாக மாறன் ஒத்துக் கொள்கிறான். மாறன் ரோமாபுரி இளவரசனோடு மலேசிய தீவுகளுக்குப் போய் அங்கே ஆட்சி அமைத்த சம்பவங்கள் தான் 'மகா வம்சம்'.

இயேசு கிறிஸ்து தோன்றி 120 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த மாறன் மகாவம்சனின் வாரிசுகள் தான் இன்றளவிலும் மலேசியாவின் அதிகார வர்க்கத்தில் உள்ளார்கள். இந்தியர்களின் செல்வாக்கு மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கொரியா போன்ற நாடுகளில் இந்திய - தமிழர் பண்பாடுடன் படிய ஆரம்பித்தது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் சரித்திரப் பதிவாக 'மகா வம்சம்' உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு முகமது காசிம், இசை எட்றி, எடிட்டிங் முகமது ஹபீஸ் - பைசல், தயாரிப்பு போகஸ் பிலிம்ஸ், இயக்கம் யுஸ்ரி.



படத்தின் ஒரு நிமிட பின்னணி இசையுடன்(மட்டும்) டிரைலர் காட்சி:



படத்தின் பத்து நிமிட டிரைலர் காட்சி:



=சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: