www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தெலுங்கின் சிவாஜி, நாகேஸ்வரராவ்!

சென்னை -  2014-01-28 00:00:00.0தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போல் தெலுங்கின் சக்ரவர்த்திகளாக இருந்தவர்கள் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ். அனேகமாக இந்திய சினிமாவில் மட்டுமின்றி உலக சினிமாவிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர்களில், தன் வாழ்நாளில் அதிகபட்ச ஆயுளை, 91 வயதில், சுமார் 72 ஆண்டுகள் நடிப்புலகில் செலவிட்டதில் உலக சாதனை புரிந்தவர் நாகேஸ்வரராவ் எனலாம்.நாகேஸ்வரராவ் நடித்த 'தேவதாஸ்' அவருக்கு மிகப்பெரும் புகழை பெற்றுத் தந்ததாகும். இதே போன்ற கதையில் அவருக்குப்பின் எத்தனையோ இந்திய மொழிகளில், எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும், 'நாகேஸ்வரராவை மிஞ்சி சாதனை படைத்தனர்? என்ற பெயரைப் பெற்று விட முடியவில்லை. 'தேவதாஸ்' படத்தில் வரும் "உலகே மாயம் வாழ்வே மாயம்- நிலையேது நாம் காணும் சுகமே மாயம்" என்ற பாடல் வரிகள் இன்றளவும் பிரபலம்.

இந்தப் படத்தைக் குறிப்பிடும் போது 1974ல் உச்சத்தில் இருந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா 'தேவதாஸு' என்ற பெயரில் 'தேவதாஸ்' படத்தை வண்ணத்தில், சினிமாஸ்கோப்பில் உருவாக்கி வெளியிட்டார். இதில் தேவதாஸாக கிருஷ்ணாவும், பார்வதியாக (தமிழ், தெலுங்கில் சாவித்திரி நடித்த வேடம்) அவரது மனைவி விஜயநிர்மலாவும் நடித்தார்கள்.

இதைக் கண்ட நாகேஸ்வரராவ், கிருஷ்ணாவின் படம் எங்கெல்லாம் வெளியானதோ, அங்கெல்லாம் தனது பழைய (1953ல் வந்தது) தேவதாஸ் படத்தை வெளியிட்டார். கிருஷ்ணாவின் 'தேவதாஸ்' படுதோல்வி அடைய, நாகேஸ்வரராவின் 'தேவதாஸ்' வெளியான பெருவாரியான இடங்களில் அபார வசூலுடன் 100 நாட்களைக் கண்டது.நாகேஸ்வரராவ் தெலுங்கில் ஸ்ரீதேவியுடன் நடித்த 'பிரேமாபிஷேகம்' (இதுவும் 'தேவதாஸ்' கதையைப் போன்றது) தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது. நாகேஸ்வரராவ் தன் 59வது வயதில் ஸ்ரீதேவியுடன் டூயட் பாடி நடனமாடி நடித்தது அந்தப்படத்தின் சிறப்புக்களில் ஒன்றாக இருந்தது. இதே படம் தமிழில் 'வாழ்வே மாயம்' என்று கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து வெளியாகி 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. ஆனாலும் தேர்ந்த நடனக் கலைஞரான கமல்ஹாசன், நாகேஸ்வரராவ் போல் நடிப்பிலும், நடனத்திலும் ஈடு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனமும் இருந்தது.நாகேஸ்வரராவ் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக அவ்வப்போது அமேரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். ரகசியம் காக்கப்பட்ட இந்த விஷயம் அண்மையில் தான் வெளியிடப்பட்டது. இந்தப் பிரச்னை இல்லையென்றால் அவர் நூற்றாண்டுகளைக் கடந்து சாதனை படைத்திருப்பார்.

இவரது மகன் தான் தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா மற்றும் வெங்கட், சத்தியவதி, நாக சுசிலா, சரோஜா ஆகியோர் மற்ற வாரிசுகள். பேரன் நாக சைத்தன்யா, வளர்ந்து வரும் இளம் நடிகர்.

செப்டம்பர் 20, 1924ல் பிறந்த இவர், ஜனவரி 22 காலமானார்.

நாகேஸ்வரராவ் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்திய இரங்கல் கருத்து வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு:English Summary:

Similar to M.G.R- Shivaji Ganesan in Tamil Film Industry, NAGESWARA RAO and N.T.RAMA RAO formed the Super Star Duo of the 'Tollywood'-the Telugu Film World in their prime, and ruled the Telugu Film Industry with unparalleled success for more than two Decades.

Out of his Glorious long life span of 91 years, Nageswara Rao spent over 72 years in the Film World and sort of created a world record for such a feat. His cameo in 'Devadass' brought him worldwide acclaim and was a milestone in his acting career. Even though many such stories in the lines of 'Devadass' were released in later years, none of the actors could match and deliver the performance of Nageswara Rao in the original Version. His role in that film stabilized as the pinnacle in the hearts of every film viewer and none could dethrone him till his voluntary retirement from the film world.

Even today, the Song 'Ulage Maayam-Nilai yethu Naam Kaanum Sugume Maayam', is instilled in our hearts not only because of its meaningful Lyrics but because of the natural portrayal of Nageswara Rao's performance in the song sequence.

While referring to 'Devadass' success, in 1974, Telugu Star Krishna remade Devadass as DevaDassu and released it as a colour film in cinemascope technology. Krishna acted as Devadass and his wife Vijayanirmala portrayed Parvathy character (the roll enacted by Savitri in both Tamil and Telugu versions). Seeing this Nageswara Rao, rereleased his original version of 'Devadass' released in 1953 after a gap of about 21 years. Krishna's 'Devadassu' flopped miserably and the re-released Nageswara Rao?s original was a grand success once again and was screened for over 100 days at all the released theaters.

Similar to Devadass's Success was the Nageswara Rao-Sridevi starrer 'Brahamabhishekam' which was a grand hit and a silver jublee film. It was a treat to watch a 59 years old Nageswara Rao singing and dancing for duet with a heroin. Even though this film which was remade as 'Vazh ve maayam' starring Kamal and Sridevi was a super-duper hit, there were criticisms and comments about Kamal not matching Nageswara Rao in his performance.

The fact that Nageswara Rao suffered from Blood Cancer for over 20 years and was forced to travel abroad frequently for his treatments, was made public only recently. 20-10-1924 born Nageswara Rao passed off on January 22nd 2014 leaving behind a legacy of super actors and achievers including Sons Nagaarjuna, Venkat, daughters Sathavathy, Naga Suseela, Saroja. His Grand Son is Naga Chaithanya, the grooming-up young actor.


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani Cinema Special magazine on Facebook, Twitter, Twitter

-செய்தியாளர்,
www.ithayakkani.com


கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: