www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

பெரியவர்களை போற்றும் படங்கள்!

சென்னை -  07-Mar-2012



அண்மையில் வெளிவந்த 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'கொண்டான் கொடுத்தான்' படங்களில் குடும்ப உறவுகளை, தாய்மையைப் போற்றும் விதமாக கதை, காட்சிகள் அமைந்துள்ளன. கடந்த சில வருடங்களாக அல்ல, பல வருடங்களாக அம்மா, அப்பா வேடங்களை கேலிக் கூத்தாக சித்தரித்து, பெயருக்கு வந்து போகும் நடிகர்கள், நடிகைகளை நடிக்க வைத்து மனம் நோக வைத்தனர். பெரியவர்களைப் போற்றும் விதமாக நகைச்சுவை நடிப்பு கவுண்டமணியில் தொடங்கி இன்று வரை இல்லவே இல்லை. இத்தனைக்கும் நகைச்சுவைக் காட்சிகளை பிரதான நகைச்சுவை நடிகர்களே உருவாக்கிக் கொண்டு அதற்கும் சேர்த்து பணம் பெறுவதை வழக்கமாக்கினர். சிரிக்க வைப்பதற்கு அர்த்தம் கெட்டதனமாக மனித உறவுகளை கேலிக் கூத்தாக்கும் முறை தமிழ் சினிமாவில் தான் காண முடியும். அதனாலேயே இன்றைய கதாசிரியர்கள், இயக்குனர்கள் மீது நமக்கு கோபம் உண்டு. ராசு மதுரவன், பிரபு சாலமன், சசிக்குமார், பசங்க பாண்டிராஜ் கொஞ்சம் விதிவிலக்காக வந்தார்கள். அது கொஞ்சம் ஆறுதல்.



இப்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் 'கொண்டான் கொடுத்தான்' படத்தில் குடும்ப உறவுகளை ஆழமாக, அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆபாச நடனக் காட்சி ஒன்று வருவது போல் கொஞ்சம் பயமுறுத்துகிறார்கள். ஆனால் வயது முதிர்ந்த ஜெயா பிரபாவின் நடனம் ஏமாற்றிவிட்டது. இது ஒரு சினிமா அதிசயம் தான். மனம் நெகிழ வைக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் நிறைய உண்டு.

இதே போல 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் அம்மா வேடத்தில் வரும் அனுபமா ஏற்கனவே 'பொக்கிஷம்' படத்தில் வயதான சேரனுக்கு மனைவியாக நடித்தவர். வம்சம், ஆடுபுலி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் காமுகர்கள் முன் அழகைக் குறைக்க மொட்டையடித்துக் கொள்வது போல் நடித்ததும், அந்தக் காட்சியமைப்புகளும் தைரியமானவை. அதற்காக இயக்குனர் எல்ரெட் குமாரை பாராட்டுகிறோம்.




தாய்-மகன் உறவை ஆழமாக, அற்புதமாகச் சொன்ன பாங்கிற்காகவும், இதனையெல்லாம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. பெரியோரை மதிக்காத எந்த விஷயமும் உருப்படாது என்பதை இனியாவது திரையுலகினர் புரிந்து கொண்டு படங்களை உருவாக்க வேண்டும்.

-சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: