www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மௌன படம் தி ஆர்டிஸ்ட் படத்திற்கு 5 விருதுகள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் -  06-Mar-2012



கடந்த 2011-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றில் 'தி ஆர்டிஸ்ட்', 'ஹூகோ' ஆகிய படங்கள் தலா 5 விருதுகளைப் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டுக்கான 84-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி (27 பிப்ரவரி) திங்கள்கிழமை காலை நடைபெற்றது.




இதில் 'தி ஆர்டிஸ்ட்' என்கிற மௌனப் படத்துக்கு 5 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. கருப்பு- வெள்ளையில் உருவான இந்த மௌனப் படம் 5 விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கார் விருது வரலாற்றில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மௌனப் படம் (சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், (சிறந்த உடையலங்காரம், சிறந்த இசைஉள்பட) 5 விருதுகளை வென்றுள்ளதும் இதுவே முதல் முறை.

தொழில் நுட்ப மாற்றத்தை ஏற்க முடியாத ஒரு கலைஞனைப் பற்றிய இந்தப் படத்தை இயக்கிய மைக்கேல் ஹசானாவிசியஸ்(Michel hazanavicius) சிறந்த இயக்குனருக்கான விருதையும் இதில் நடித்த ஜீன் டுஜார்டின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளனர்.




அதே போல் ஒரு சிறுவனின் சினிமா காதலைப் பின்புலமாகக் கொண்டு பிரபல இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸஸ் இயக்கிய 'ஹூகோ' 3-டி திரைப்படம் ஒளிப்பதிவு, கலை இயக்கம் உள்பட 5 விருதுகளை வென்றுள்ளது.

இங்கிலாந்தின் மறைந்த முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான 'தி அயர்ன் லேடி' படத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இவர் பெறும் மூன்றாவது ஆஸ்கார் விருது இது. ஆஸ்கார் விருதுக்காக மெரில் ஸ்ட்ரீப்பின் பெயர் இதுவரை 17 முறை பரிந்துரைக்கபட்டுள்ளது.




வெளிநாட்டு மொழி பிரிவில் ஈரானின் 'ஏ செபரேஷன்' சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றது. சிறந்த ஆவணப்படத்துகான விருதை 'சேவிங் பேஸ்' என்ற பாகிஸ்தானியப் படம் பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிராட் பிட் நடித்த 'மணிபால்', ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'வார் ஹார்ஸ்' படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. 84 -வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் பின்னணி இசையை இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ. ஆர். ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.


-சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com



கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: