www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

லண்டனில் வளரும் போடா போடி!

சென்னை -  06-Feb-2012



சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் 'போடா போடி'

'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு பின் சிம்பு நடிக்கும் படமொன்று வெளிநாட்டில் படமாக்கப்படுவது 'போடா போடி'க்காக. இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு யுவன், யுவதி சம்பந்தப்பட்ட காதல், வாழ்வியல் தொடர்பான மூன்று கட்டங்களை ஊடுருவிச் செல்லும் கதையமைப்பைக் கொண்டது 'போடா போடி'.



லண்டனிலேயே முழு படப்பிடிப்பையும், குறிப்பிட்ட காலத்தில் படம் பிடித்திருக்கின்றனர். 'போடா போடி' நீண்ட நாட்களாகவே செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் சரத்குமாரின் மகன் வரலட்சுமி இதில் சிம்புவுக்கு ஜோடி.
சிம்பு நடித்த படங்களிலேயே அதிக செலவு செய்து எடுக்கப்படுவது இதுவே. லண்டனில் அழகிய பகுதிகளில், இதுவரை கேமரா சென்றிராத இடங்களிலெல்லாம் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் ஒரு குழந்தையை பிறப்பொன்றில் தொடங்கி, அது ஆறு மாத காலம் வளரும் வரையிலும் படிப்படியாக படம் பிடித்துள்ளனர். படத்தில் அந்தக் குழந்தையும் ஒரு கதாபாத்திரம்.

படத்தினை விக்னேஷ் சிவன் எழுதி-இயக்க, தரன் இசையமைக்க, ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த டங்கன் டெல்ஃபோர்டு ஒளிப்பதிவைக் கையாள்கிறார், படம் ஹைடெக் தொழிநுட்பத்தில் வளர, தலைப்பு மட்டும் 'போடா போடி' யா?

-சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: