www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இந்திய ஜனநாயகத்தில் வளரும் ஆபத்து!

சென்னை -  2016-04-17 01:37:31.0இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஜனநாயகத்தில் ஒரு விபரீதம் வளர்ந்து, தற்போது, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. நேரு குடும்பத்தால் தொடங்கி வைக்கப்பட்ட விபரீதம் இது - அது, இந்திரா, ராஜீவ், சோனியா என விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு குடும்பத்தில், அதிலும், ஒரே குடும்பத்தினால் காங்கிரஸ் கட்சியிலும், அது ஆளும் அரசுகளினாலும், அதிகார பகிர்வு இல்லாமல் வளர்ச்சி விகிதங்கள் உயரவே இல்லை. இது நாடெங்கும் பறவி விட்டது.

தமிழ் நாட்டில், அண்ணா காலத்தில் 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற குரல் ஓங்கி ஒலித்தது. அவ்வளவு தான். காங்கிரஸ் சார்பில் தமிழகத்தை ஆண்ட காமராஜர் கூட அதிகாரங்களை தன்னிடமே குவித்துக் கொள்ளாமல், தனக்கு கீழே இருந்த பக்தவச்சலம், ஆர்.வெங்கட்ராமன், கக்கன், சி.சுப்ரமணியம்,ஜோதி வெங்கடாச்சலம், ஆகிய அமைச்சர்கள் தன்னிச்சையாய் முடிவெடுத்து செயலாற்றும் சுதந்திரம் அளித்திருந்தார். காமராஜர், 1964க்குப் பின் பக்தவச்சலத்தை முதல்வராக்கிவிட்டு தான் அகில இந்திய அரசியலில் ஈடுபட்டார். அதனால் தான் நேருவிற்கு பின் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ஆகியோர் பிரதமர்களாக முடிந்தது. பக்தவச்சலத்தின் நிர்வாகத் திறன் குறைபாட்டால், தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

அறிஞர் அண்ணா காலத்தில்...

அண்ணா 1967-ல் முதல்வரான போது அவருக்கு அடுத்து, நாவலர் நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், செ.மாதவன், சத்தியவாணிமுத்து, கோவிந்தசாமி, கே.ஏ.மதியழகன், பாவலர் முத்துசாமி ஆகியோர் அமைச்சர்களாக சுதந்திரமாக செயல்பட்டனர். இந்த சுதந்திரத்தை கருணாநிதி தவறாக பயன்படுத்தி தனக்கு என்ற ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் தான் அண்ணா மறைவிற்கு பிறகு அவர் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி, எம்.ஜி.ஆரையும் இணங்கச் செய்து தமிழக முதல்வராக, தி.மு.க தலைவராக முடிந்தது.

கருணாநிதி முதல்வரான பின்...

அண்ணா வரை பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம், கருணாநிதி வந்த பின் ஒரே இடத்தில், அதுவும், படிப்படியாக அவரது குடும்பத்தினரிடம் சிக்கத் தொடங்கியதன் காரணத்தால் தி.மு.க பலம் பெற்று வளர்ந்தது, கருணாநிதியும் அபார வளர்ச்சி பெற்றார். தி.மு.க.வில் அவரது குடும்பம் மட்டுமே வளர்ச்சி பெற்றது. இன்று வரை அதே நிலைமை.

எம்.ஜி.ஆர் காலத்தில்...

எம்.ஜி.ஆர் முதல்வரான பின், மீண்டும் அனுகுமுறை மாறியது. அவர் அண்ணாவின் வழியில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரங்கள் பரவலாக இருக்கும்படி செய்தார். 1977-ல் அவர் ஆட்சிக்கு வந்த போது நாஞ்சில்.கே.மனோகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்டி.சோமசுந்தரம், பி.டி.சரஸ்வதி, கே.ஏ.கிருஷ்ணசாமி, குழந்தைவேலு, ஆகியோர் அமைச்சர்களாகி, தங்கள் பணிகளை சுதந்திரமாக செய்ய முடிந்தது. 1980-ல் நாவலர் நெடுஞ்செழியன், க. ராசாராம், காளிமுத்து என்று புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அதற்கு பின்பு தான் செல்வி ஜெயலலிதா அ.தி.மு.கவில் சேர்ந்து கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பேற்றார். தி.மு.கவினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது ஜெயலலிதாவே. சில சமையங்களில், அதிலும் மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு கே.காளிமுத்து பதில் தாக்குதலை தொடுத்தார். எம்.ஜி.ஆர் எப்போதும் ஆட்சி பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிப்பார். எம்.ஜி.ஆரோடு நல்ல தன்மைகள் அத்தனையும் முடிந்து போனது.

ஜெயலலிதா வந்த பின்...

செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் முதல் இரண்டு வருடங்கள் எந்தப் பிரச்சினையுமில்லை. அதற்குப் பின் கட்சியாகட்டும், ஆட்சியாகட்டும் அவரின்றி ஒரு அணுவும் அசையவில்லை. கட்சியிலும், அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்து போனது. நடுவில் சசிகலா குடும்பத்தினரின் அத்துமீறல்கள் வேறு. மீண்டும் அந்த அபாயம் தலைதூக்குவது போலிருக்கிறது.

மற்ற கட்சிகளின் நிலை என்ன?

அடுத்து, விஜயகாந்த் குடும்பம், ராமதாஸ் குடும்பம், ம.தி.மு.க.வில் வைகோ. விடுதலை சிறுத்தைகளில் திருமாவளவன், த.மா.காவில் ஜி.கே.வாசன் என்று அதிகார மையங்களாக இருக்கிறார்கள். தென்னகத்தில் மட்டுமல்லாது, வடக்கேயும், முலாயம் சிங், மாயாவதி, லல்லு பிரசாத் யாதவ் என்று அதிகார மைய்யங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.

வெளிநாடுகளிலும் குடும்ப அரசியல்...

அதே போல் மலேசியாவில் மகாதீர் முகமது குடும்பம், இலங்கையில் முன்பு ஆட்சியிலிருந்த ராஜபக்சே குடும்பத்தாரின் ஊழலை பெருக்கிய சாதனையாளர்கள் என இதர நாடுகளிலும் சில உதாரணங்களுக்காக மட்டும்.

ஒரே தலைமையை சரி செய்ய முடியுமா?

இவை சரி செய்யப்பட வேண்டுமென்றால், அந்தக் கட்சிகளின் தொண்டர்களெல்லாம் தலைமை எது சொன்னாலும், செய்தாலும் தலையாட்டிவிட்டுச் செல்லும் ஆட்டுமந்தை போல், கொத்தடிமைகள் போல் இல்லாமல் 'ஏன்', 'எதற்கு' என்று கேள்வி, விமர்சனம் செய்பவர்களாக தைரியத்துடன் இருந்தால் மட்டுமே சுயநலம் விலகி பொது நலம் பெருகும்.

உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: