www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

உயிர் பிழைத்தும் வழியில்லாத அனுமந்தப்பா!

காஷ்மீர் -  2016-02-11 22:37:43.0



உலகிலேயே உயரமான காஷ்மீரிலுள்ள சியாச்சின் பனி மலைப் பகுதியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள், கடுமையான பனிப்பொழிவினாலும், பனிச்சரிவினாலும் புதையுண்டு அவர்கள் 25 அடிக்கு கீழே சிக்கினாலும், மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான கர்நாடகத்தைச் சேர்ந்த அனுமந்தப்பா மட்டும் உயிரோடு இருந்தார். ஆனால் ஆறு நாட்களாக பனிக்கட்டிகளுக்குள் சிக்கியிருந்ததால் உடல் உறுப்புகள் செயலிழந்து போயிருந்தன. புது தில்லி ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுநீரகங்கள், கல்லீரல் செயலிழந்து, இரத்த ஓட்டம் இல்லாதிருந்தது. அனைத்தையும் சரி செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டும் பலனின்றி நேற்று முற்பகல் 11.45 மணியளவில் அனுமந்தாவின் உயிர் பிரிந்தது. உலகமெங்குமுள்ள இந்தியர்கள் அவருக்காக பிரார்த்தனைகள் செய்தும் பலனளிக்காமல், இன்று அனைவருமே தூக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஆக்ரமிப்பையும், ஊடுருவலையும் தடுக்க வேண்டுமென்பதற்காக 20 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் சூழ்நிலையில் கடும் குளிரில் உயிரை துச்சமாக மதித்து பாதுகாப்பு பணியிலிருந்த நமது ராணுவ வீரர்களில், கடந்த 30 ஆண்டுகளில் 869 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அந்த தியாகத்திற்கு ஈடாக உலகில் வேறெதையும். அந்த தியாகத்திற்கு ஈடாக உலகில் வேறெதையும் சொல்ல முடியாது. அனுமந்தப்பாவின் தியாகத்தை போற்றி வணங்குகிறோம்.


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: