எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த காலத்திலேயே ஜேப்பியார் திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக வசந்த அழைப்புகள் (டி.ராஜேந்தர் உருவாக்கிய படம்), போர்ட்டர் பொன்னுசாமி, தங்க ரங்கன், உன்னைவிட மாட்டேன் ஆகியவற்றை தயாரித்தவர், எம்.ஜி.ஆர்., நடித்து நின்று போன 'நல்லதை நாடு கேட்கும்' படத்தில் தானே நாயகனாக நடித்து தயாரித்தார்.
எம்.ஜி.ஆர்., அமரரான பின் படிப்படியாக அரசியலிலிருந்து விலகி, கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். சத்யபாமா பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கான உணவு விடுதியை ஒரு அன்னசத்திரம் போல் மாணவர்களைத் தேடி யார் சென்றாலும் சைவ, அசைவ உணவு வகைகளை விருப்பம் போல் சாப்பிட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அந்த கல்வி நிறுவனங்களின் பல்வேறு சிறப்புக்களில் இதுவும் ஒன்று. ஜேப்பியார் தன் 85 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube
-செய்தியாளர், www.ithayakkani.com |