www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ஒட்டு போடுவதற்காக அமெரிக்க பயணத்தை தள்ளிப் போட்ட கமல்ஹாசன்!

சென்னை -  2016-05-17 23:08:53.0



24 படத்தின் திரையீடுக்காக அமேரிக்கா சென்றுள்ள சூர்யா, தேர்தல் விழிப்புணர்ச்சி படத்தில் நடித்தவர், தான் ஓட்டுப்போட வர இயலாததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ காட்சி வெளியிட்டிருந்தார். கமல்ஹாசன் தன் குழுவினரோடு ஓட்டுப்பதிவுக்கு ஒரு வாரம் முன்பே 'சபாஷ் நாயுடு' படத்திற்காக அமேரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். ஓட்டுப்பதிவு நாளில் அங்கு படப்பிடிப்பு தொடங்குவதாக ஏற்பாடாகியிருந்தது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் தேர்தலில் ஓட்டுப் போடுவதை அத்தியாவசிய கடமையாக கருதி அதிலிருந்து ஒரு போதும் விலக விரும்பாத கமல்ஹாசன், இந்த தேர்தலில் அமெரிக்காவில் படப்பிடிப்பு என்ற சூழ்நிலை குறுக்கிட்டபோது, அதனால் ஓட்டுப் போடும் கடமையிலிருந்து விலகக் கூடாது என்று அமெரிக்காவில் படப்பிடிப்பு, பயணம் அனைத்தையும் தள்ளி வைத்தார். நேற்று 16 மே, 2016 காலையில் கமல்ஹாசன் குடும்பத்துடன் வாக்குச் சாவடிக்கு சென்று தன் ஓட்டை பதிவு செய்தார்.

கமல்ஹாசனுடன் இதயக்கனி ஆசிரியரின் தேர்தல் அனுபவம்:

தேர்தல் என்ற வகையில் கமல்ஹாசனின் ஓட்டுப்போடும் அக்கறை, சிரத்தையை இரண்டு முறை நேரிலேயே அறியும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடந்த 21.1.89 அன்று சென்னை வாகினி ஸ்டூடியோவில் 'அபூர்வ சகோதரர்கள்' (150வது படம்) படப்பிடிப்பினை கமல்ஹாசன் நடத்திக் கொண்டிருந்தார். அன்று அவரோடு 150 பட அன்பவங்களை கேட்டறிந்து எழுதுவதற்காக காலையிலேயே சென்றிருந்தேன். கமல் இரு வேடங்களில் நடிக்கும் காட்சிகள் அங்குள்ள கட்டிடங்களின் மேல் பகுதியில் நடந்தது. குள்ள அப்பு வேடமும் அதில் ஒன்று என்பதால் படப்பிடிப்புக் குழுவினர் தவிர வேறு யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. கமல் என்னை தனது ஒப்பனை அறைக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் படப்பிடிப்பு இல்லை. சுமார் இரண்டு மணி நேரம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார் கமல். திடீரென்று (4.30 மணி இருக்கும்) நேரத்தைப் பார்த்தவன், "இன்று சட்டமன்ற தேர்தலாயிற்றே, 5.00 மணிக்குள் ஒட்டு போட வேண்டுமே" என்று படபடப்புடன் சொன்ன போது, "ஆமா நானும் மறந்துட்டேன்" என்று கமல் புறப்பட தயாரானார்.

நான் சைக்கிளில் வேகம் காட்டி 5.00 மணிக்குள் தேனாம்பேட்டையிலிருந்த வாக்குச் சாவடிக்குச் சென்று என் ஓட்டை பதிவு செய்து விட்டேன். கமல் காரில் புறப்பட்டுச் சென்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓட்டுச் சாவடிக்கு செல்ல இயலவில்லை. அதனால் அன்று அவர் ஏமாற்றதிற்குள்ளானார்.

1989 ஏப்ரலில் 'அபூர்வ சகோதரர்கள்' வெளியானது. நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. ஓட்டுப்பதிவு அன்று கமல்ஹாசனை சந்திக்க அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகம் சென்றிருந்தேன். மனைவி சரிகாவுடன் அலுவலகம் வந்தவர், என்னைப் பார்த்ததும் "இன்னிக்கு உஷாரா காலையிலேயே ஒட்டு போட்டுட்டு வந்துட்டோம். அன்னிக்கு நடந்ததை மறக்க முடியுமா?" என்று கமல் தமிழில் சொன்னது சரிகாவுக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் 'அபூர்வ சகோதரர்கள்' படப்பிடிப்பில் நடந்ததைச் சொன்னார்.


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: