www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

காற்றலையில் காவியமாய் நிற்கும் பழைய பாடல்கள்!

சென்னை -  2018-08-27 23:08:14.0



மூத்த குடிமக்களின் வேண்டுகோளுக்கிணங்க முழுக்க முழுக்க பழைய திரைப்பட பாடல்கள் மட்டும் இடம்பெறும் "லஷ்மன்ஸ்ருதி" இசைக்குழுவின் சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி. #OldIsGold

28.8.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள "மியூசிக் அகாடமி" அரங்கில் நடைபெற உள்ளது.

பழைய பாடல்களுக்கான இசை நிகழ்ச்சியை நேரடியாக கேட்க விரும்புவோர் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்கவும். இந்த இசை நிகழ்விற்கான அனுமதி இலவசம் என்பதனை இசை ரசிகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.




மூத்த குடிமக்களின் இசை தாகம் தீர்க்கும் வகையில் 50, 60, 70, 80 ஆம் ஆண்டுகளில் வெள்ளித்திரையில் வந்த பாடல்களை மட்டுமே இசைக்குழுவினர் வழங்க உள்ளனர். ஆகையால் இளைஞர்கள் தங்கள் இல்லத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மற்றும் தங்கள் உறவு வட்டத்தில் இருக்கும் பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என அனைவரையும் அழைத்து வரலாம். இன்றைய தலைமுறையும் அக்காலத்து இசையின் வடிவத்தினை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வரிய இசை நிகழ்ச்சியினை நேரடியாய்க் காணும் வாய்ப்பினை பல பெரியவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில்

இச்செய்தியினை பல்வேறு ஊடகங்களில் பகிர்ந்து உதவிடுமாறு அன்பர்களை வேண்டுகிறோம்.
28.8.2018, காலை 10.00 மணி, மியூசிக் அகாடமி, ஆழ்வார்பேட்டை, சென்னை
அனுமதி இலவசம்! அனைவரும் வருக !

தொடர்புக்கு 044 4441 2345, 9382221044, 7299983121, 9962877030, 9940135423

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: