www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சென்னையில் திருவையாறு 14

சென்னை -  2018-12-11 21:57:40.0

"லஷ்மன் ஸ்ருதி"யின்  "சென்னையில் திருவையாறு"  14ஆம் ஆண்டுவிழா

"மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்" அவர்களின் திருவுருவ மெழுகுச்சிலை திறக்கப்படும் விழா

'ஜீ தமிழ்' ஆதரவில்  'போத்தீஸ் பரம்பரா பட்டு'  வழங்கும்
"லஷ்மன் ஸ்ருதி" யின் "சென்னையில் திருவையாறு" 14ஆம் ஆண்டுவிழா

 
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கின்றார்.

 "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்?அவர்களின் திருவுருவ மெழுகுச்சிலையை அபிநய சரஸ்வதி பத்மபூஷண் திருமதி.சரோஜாதேவி அவர்கள் திறந்து வைக்கின்றார்
 
18 டிசம்பர் 2018,
மாலை 4.45 மணி,
காமராஜர் அரங்கம்,
தேனாம்பேட்டை
சென்னை 18.


 
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ! அனைவரும் வருக !அன்புடையீர் வணக்கம், 

'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழுவின் சார்பாக "சென்னையில் திருவையாறு" எனும் சங்கீத நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்று வருகிறது. 
உலகெங்கும் இருந்து சங்கீத நாட்டிய ரசிகர்கள் கலந்து கொள்ளும் "சென்னையில் திருவையாறு" விழாவில் துவக்க நாளின் சிறப்பம்சமாக "மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்"அவர்களின் திருவுருவ மெழுகுச்சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.  

உலகம் முழுவதும் உள்ள மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கும், தென்னிந்திய இசை ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான இச்செய்தியை தெரிவிப்பதில் மிக்க பெருமையடைகிறோம். 

இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ! அனைவரும் வருக ! 

'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்'

· இசைத்துறையில் பல்வேறு பரிமாணங்களை உருவாக்கியவர். 

· எளிய மக்களுக்கும் புரியும் விதம் மெல்லிசை வடிவத்தினை ஏற்படுத்தியவர். 

· எல்லா கால கட்டத்திற்கும், சூழ்நிலைக்கும்,  மனநிலைக்கும் சம்பவங்களுக்கும், உணர்விற்கும் பாடல்களை வழங்கிய மாமனிதர். 

· இன்றும் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் காலை மாலை என்றில்லாமல் எல்லா வேளைகளிலும் அவரது பாடல்களை ஒலிபரப்பக்கூடிய வண்ணம் தன் படைப்புகளை வழங்கியவர். 

ஆம் ஆண்டு பிறந்து1950 முதல் 2015 வரை திரை இசை, தனியிசை, பக்தியிசை மற்றும் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் தன்னிகரற்று விளங்கியவர்.

· தனது நீண்ட நெடிய இசைப் பயணத்தில் அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, என்.டி.ராமராவ், புரட்சித்தலைவி ஜெயலலிதா என்று ஐந்து தென்னக முதல்வர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்.

· மகாகவி பாரதியாரின் பல பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்தவர்.

· பாரதிதாசன், பாபநாசம் சிவன் முதற்கொண்டு நூற்றுக்கணக்கான பாடலாசிரியர்களுடன் ஒன்று சேர்ந்து ஆயிரக்கணக்கானப் பாடல்களை நமக்கு அளித்தவர்.

· தமிழ்த்திரையின் முதல் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் முதற்கொண்டு எண்ணற்ற பாடகர் பாடகிகளை பயன்படுத்தி என்றென்றும் வாழும் தனது மெல்லிய மெட்டுக்களை உருவாக்கியவர்.

· எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம், முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகுமார் என்று பல்வேறு நட்சத்திரங்களுடனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், வாலி, ஆலங்குடி சோமு, ஜெயகாந்தன், ஆத்மநாதன், புலமைப்பித்தன், நா.காமராசன், முத்துலிங்கம், வைரமுத்து,
அவினாசி மணி என்று பல்வேறு கவிஞர்களுடனும்,  டி.ஆர்.ராமண்ணா, கே.சங்கர், ஏ.சி.திருலாகச்சந்தர், தாதாமிராஸி, பிரகாஷ்ராவ், கிருஷ்ணன் பஞ்சு, கே.எஸ்.கோபால கிருஷ்ணன், ஸ்ரீதர், பி.மாதவன்,
வியட்நாம் வீடு சுந்தரம், சி.வி.ராஜேந்திரன், கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், ஆர்.சி.சக்தி, எஸ்.ஏ.சந்திரசேகரன் போன்ற எண்ணற்ற இயக்குநர்களுடன் பயணம் செய்தவர்.

· மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பாடல்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேல் இவருடைய இசை என்றால் மிகையாகாது.

· தென்னிந்திய பெரும்பான்மையான படத்தயாரிப்பு நிறுவனங்களான ஏவிஎம், ஜெமினி, விஜயா வாஹினி, ஆர்.ஆர்.பிக்சர்ஸ், பாலாஜி, சரவணா ஃபிலிம்ஸ், சத்யா மூவிஸ் போன்ற நிறுவனங்களின் இசையமைப்பாளர் இவரே.

· ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தது மட்டுமில்லாமல், நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய இசையமைப்பாளர்.

· பிற இசையமைப்பாளர்கள் பாடல்களையும் எந்தவித தயக்கம் இல்லாமல் பாடிக்கொடுத்த பெருந்தகையாளர்.

· தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்குத் தனது பாணி இசையமைப்பைக் கொண்டு சென்று வெற்றியை ஈட்டியவர்.

· பக்திப் பாடல்கள்,தனிப்பாடல்கள் துறையிலும் முடிசூடா மன்னர்.

· கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து அவர் நமக்கு கொடுத்த கிருஷ்ண கானம் காலத்தை வென்று இன்றும் நம் இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

· அன்னை வேளாங்கண்ணி, இயேசு காவியம் மற்றும் கலிமா என அனைத்து சமயத்தினருக்கான பாடல்களின் இசையினை அளித்துள்ளார்.

· 1970 இல் அவர் இசையமைத்த த்ரில்லிங் தீமேட்டிக் ட்யூன்ஸ் (Thrilling thematic tunes) என்ற தனிப் பாடல் தொகுப்பே இங்கு வந்த முதல் ஸ்டீரியோ முறையில் இசையமைக்கப்பட்ட இசையாகும். இந்தத் தொகுப்பில் வந்த இசை இந்தியா மற்றும் இலங்கை வானொலி  மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் முகப்பு இசையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை வானொலி நிலையத்தின்  பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியின் முகப்பு இசை இந்த தனிப்பாடல் தொகுப்பிலிருந்து தான் பெறப்பட்டது.

· அனைத்து அரசியல் கட்சியினருக்குமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.

· யுனிசெஃப் சேவை நிறுவனத்திற்காக ஒரு இசைக் கோர்வையை வழங்கியவர்.

· ஜெர்மன் நாட்டு விமான நிறுவனமான லுஃப்தான்ஸா (Lufthansa) இவரது தமிழ்ப்பாடல்களை 80 களில் தனது நிறுவன விமானங்களில் ஒலிக்க ஏற்பாடு செய்தது.

· 1960 களில் தனது இசைக் கலைஞர்களுடன் மெல்லிசை மேடைக் கச்சேரி செய்த போதுதான் தான் தென்னிந்தியாவில் முதல் மெல்லிசை மேடைக் கச்சேரி துவங்கியது. அதன் தொடர்ச்சியே இன்றைய எண்ணற்ற மேடைக் கச்சேரி கலைஞர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

· தென்னிந்திய இசைக்கலைஞர்களின் சங்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

· இசைக் கலைஞர்களின் ராயல்டியை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.ஆர்.எஸ் (IPRS) அமைப்பு அமைய முக்கியமானவர்.

· தமிழ்த்தாய் வாழ்த்து இவர் இசையமைப்பில் உருவானது. இன்றும் அனைத்து பள்ளிகளிலும் அரசு விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ் வாழ்த்துப் பாடலாக ஒலிபரப்பப்படுகிறது.

· மெல்லிசை மன்னர், மெல்லிசை மாமன்னர்,மெல்லிசைச் சக்ரவர்த்தி இப்பட்டங்களைத் தொடர்ந்து அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் திரை இசைச்சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர். 

· ஒரு திரை இசை அமைப்பாளருக்கான ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டது முதன்முதலில் 
மெல்லிசை மன்னருக்குத்தான்.

· இரண்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

· 2004 ஆம் ஆண்டு இவர் இசை அமைத்த ?விஷ்வதுளசி? என்ற படப்  பாடலுக்காக  கனடாவில் ஒரு உலகளாவிய விழாவில் தங்கமயில் விருது வாங்கியவர்.

· மெல்லிசை மன்னரின் 'எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' என்ற கலாட்டா கல்யாணப் படப்பாடல் உலகப் புகழ் பெற்ற 'ஹார்வார்ட்' மற்றும் 'டொரண்டோ' பல்கலைக் கழகங்களில் உலக இசைப் பகுதியில் மெல்லிசைப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

· பாமரர்கள், படித்தவர்கள்,இசை அறிஞர்கள் என அனைவரின் ஒருமித்த அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர் மெல்லிசை சக்ரவர்த்தி எம்.எஸ்.வி அவர்கள்.

இவ்வாறு பல சிறப்புகளையும், சாதனைகளையும் தன்னகத்தே கொண்ட 
"மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை கெளரவிக்கும் வகையில் "சென்னையில் திருவையாறு" துவக்கவிழாவில் "லண்டன் மேடம் தூஸாட் வேக்ஸ் மியூசியம்" அரங்கத்தில் உள்ளதைப்போல் தத்ரூபமான மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது.
 
18 டிசம்பர் 2018, 
மாலை 4.45 
மணியளவில் சென்னை காமராஜர் அரங்கில்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமையில்,

மெல்லிசை மனனர் காலத்தில் அவருடன் பணியாற்றிய, காலத்தால் மறக்க முடியாக் காவியங்களில் நடித்துப் புகழ் பெற்ற "பத்மபூஷண் அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி" அவர்கள் தனது பொற்கரங்களால் அன்னாரது சிலையை திறந்து வைக்கிறார்.
 
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதால் அனைத்து பொது மக்களையும் ரசிகர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.
 
உலகத்தரம் வாய்ந்த சிற்பக்கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் இந்த மெழுகுச்சிலை பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தி வியப்பில் ஆழ்த்த உள்ளது.
 
வளரும் இளம்கலைஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் இசையுலகில் இன்று நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் பிரபலங்களும் தங்களின் மானசீககுருவாகப் போற்றி வணங்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திருவுருவ மெழுகுச்சிலையுடன் பொதுமக்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக்கொள்ள காமராஜர் அரங்கின் நுழைவு மண்டபத்தில் வசதி செய்யப்படுகிறது.
 
மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கும், இசைரசிகர்களுக்கும் இப்பெருமைமிகு செய்தியைக் கொண்டு சேர்க்கும் வகையில் இச்செய்தியைக் காணும் அனைவரும் மற்றவர்க்கு தெரிவித்து, பகிர்ந்து,
ஊடகங்களுக்கும் அனுப்பி அன்னாருக்கு கெளரவம் சேர்க்கும் இவ்விழாவிற்கு பொதுமக்களும் ரசிகர்களும் திரளாக வருகைதந்து சிறப்பு செய்ய ஆவன செய்யும்படி அனைவரையும் வேண்டுகிறோம்.
 
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ! அனைவரும் வருக !

கடந்த ஆண்டுகளில் "பாரதரத்னா" ஏ.பி.ஜே. அப்துல்கலாம், "பாரதரத்னா" எம்.எஸ். சுப்புலட்சுமி, "பாரதரத்னா" எம்.ஜி.ஆர் மற்றும் "பத்மவிபூஷண்" டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் மெழுகுச்சிலைகள் விழாவில் வைக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: