www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்

சென்னை -  2016-04-23 09:56:14.0

வசந்தி தேவி சிறந்த கல்வியாளரா?

அ.தி.மு.க வேட்பாளராக சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் செல்வி. ஜெயலலிதாவை வீழ்த்த பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் இதற்காக முனைப்போடு செயல்படுகின்றன.

தற்போது, கல்வியாளர் என்ற முகம் கொண்ட, திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தராக பணிபுரிந்த வசந்தி தேவியை விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக ஜெயலலிதாவை எதிர்த்து நிறுத்த முனைந்துள்ளது. அவரை பொது வேட்பாளராக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதற்கு காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.


நேர்மையற்ற திருமாவளவனுக்கு வசந்தி தேவி ஆதரவா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் என்றதும் வசந்தா தேவி என்ற பெயருக்கு இருந்த சிறிதளவு நற்பெயரும் அடிபட்டுப்போய்விட்டது. அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் எந்த முறையில் கட்சி நடத்துகிறார், அவரது கடந்த காலம் என்ன என்று ஆராய்ந்தால், அவரை கூட்டணியில் வைத்து வளர்த்த தி.மு.க, அதிமுக மற்றும், இன்றைய மக்கள் நல கூட்டணியை அமைத்த வை.கோ உட்பட அத்தனை பேருமே குற்றவாளிகளே! கட்டப் பஞ்சாயத்து நடத்தி அதில் பொருளீட்டியவர்கள் எப்படி நேர்மையானவர்களாக இருக்க முடியும்? வன்முறை அரசியலுக்கு வித்திட்ட திருமாவளவன், பா.ம.க ராமதாஸ் மோதலால் தமிழகத்தில் பல பகுதிகளில் மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றனர். இவரை போன்றவர்களையும் நம்பும் அந்த இன மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அம்பேத்கர் தவிர வேறு யாரும் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் இல்லை. அவர்களை வழிநடத்திச் செல்ல தகுதியுடையவர்கள் இன்று எவரும் இல்லை.

வசந்தி தேவியின் கடந்த காலம் என்ன?

இதையெல்லாம் உணராமல் வசந்தி தேவி நிற்பார் என்றால் அவரது கடந்த காலம் எத்தகையது என்று கருத்தில் கொள்ள வேண்டும். இவரைப் பற்றி முகநூலில் "அரசு வரிப் பணத்தில் செயல்படும் கல்வி அமைப்புக்களை இடது சாரி மாஃபியாவிடம் காவு கொடுப்பதைத்தான் அம்மணி செய்து வந்தார். மனோன் மணியம் பல்கலைக் கழகத்தில் அதைத்தான் செய்தார். சுந்தர ராமசாமியின் திருதராஷ்டிர வீழ்ச்சிக்குப் பிறகு அம்மணியுடன் அவர் நடத்திய உரையாடல்கள் புத்தகமாக வந்த போது, அதிலிருந்த புரட்டுகளை மேடையிலே வெளிப்படுத்தியவர் பேராசிரியர் உமையுறுபாகன் (UMAYORU BHAGAN) அவர்கள்" என்று அரவிந்தன் நீலகண்டன் கூறியிருக்கிறார்.

உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com


கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

Gs செந்தில் குமார் / கடலூர் 23-Apr-2016

ஜாதியை வைத்து வாழ்ந்து வருபவர் ஜாதிய தலைவன் கல்வியை வைத்து வாழ்ந்து வருபவர் கல்வியாளர் ஜாதி அழியாமல் இருக்க கல்வியை அழித்தால் போதும் இருவர் பணியும் அது தான்