www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தண்டிக்கப்படாத தவறுகள் - 2

தூத்துக்குடி -  2017-12-11 08:28:26.0



தி.மு.க.வில் கருணாநிதி முதல்வராக, கட்சித் தலைவராக தலையெடுத்தபின் அத்தனை நல்ல அம்சங்களும் கட்சியிலும், ஆட்சியிலும் ஒன்றன் பின் ஒன்றாக மறையத் தொடங்கின. வட்டச் செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஊழல் பெருச்சாளிகளாக மாறினர்.

‘தங்கப்பதக்கம்’ படத்தில் சோ-வின் வையாபுரி கதாபாத்திரம் அதை நன்கு பிரதிபலித்தது. அரசியல்வாதி வையாபுரி, ‘வைகை வளவன்’ என்ற பெயர் மாற்றத்துடன் செய்யும் மோசடிச் செயல்கள் அன்றைய (எம்.ஜி.ஆர் இல்லாத) தி.மு.க-வை வெளிப்படுத்தியது.

இதற்கு தூத்துக்குடியில் ஒரு உதாரண கர்த்தாவாக விளங்கியவர் நகர மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலர் பதவிகளை வகித்த பெரியசாமி.

15 வருடங்களுக்கு முன்பு, தூத்துக்குடிக்கு சென்றபோதே அவரைப் பற்றி வண்டி வண்டியாக ஊழல் கதைகள் கூறினர். அப்போதே அவர் சில நூறு கோடிகளுக்கு சொந்தக்காரர் என்றனர்.

சாதாரண கூலித் தொழிலாளியாக, மூட்டை சுமந்தவராக, எழுதப் படிக்கத் தெரியாத பெரியசாமி, ‘மதுரா கோட்ஸ்’ஸில் தொழிற்சங்கத்தில் சேர்ந்த பின் வாழ்க்கை திசை மாறியது. அரசியலில் வை.கோ-வால் தி.மு.கவில் வளர்ந்தவர் இவர்.

தூத்துக்குடியில் இன்று மிகப் பெரிய வணிக வளாகம், திருமண மண்டபம், லாட்ஜ் என்று அசையும், அசையாத சொத்துக்கள் ஏராளம். மணல் குவாரி உட்பட எத்தனை தொழில்கள் அவருக்கு.! நகர, மாவட்ட ரீதியில் அவர் மீதம் வைத்த காண்ட்ராக்ட் வியாபாரம் மட்டுமே மற்றவர்களுக்கு சென்றது. எதிர்த்து குரல் கொடுப்பவர்கள், எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர்கள் வாயை மூடிவிடுவார் கரன்சி மற்றும் துணை காண்ட்ராக்ட் சங்கதிகளால்.

மகள் கீதா ஜீவன் மந்திரியான பின் சொல்ல வேண்டுமா? அவருக்கும் மாவட்ட செயலர் பதவி, மகனுக்கு இளைஞரணி பொறுப்பு என்று குடும்ப அரசியல் தூத்துக்குடி மாவட்டத்தை ஆட்டிப்படைத்தது.
அப்படியும் அவர் மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீதும் ‘வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக’ வழக்கு போடப்பட்டு, ஆண்டுகள் கணக்கில் நீதி மன்றங்களில் நடை போட்டு வருகிறது. பெரியசாமி உடல் நலமின்றி இறந்து போய் நாளாகிறது.

ஆனால், அவர்கள் சேர்த்த சொத்துக்கள் எப்படி வந்தது என்று தூத்துக்குடி மக்களுக்கு தெரியும். நாட்டு மக்கள் எப்போது அறிவர்? இவர்கள் தண்டனை எப்போது பெறுவர்?


- இதயக்கனி ஆசிரியர் எஸ்.விஜயன்

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

Arasappan Pandi11-Dec-2017

He is a rowdy and coward. He followed his leader's foot step in corruptions and all in-humans.