www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தண்டிக்கப்படாத தவறுகள்-3

சேலம் -  2017-12-12 09:27:55.0

கருணாநிதியை விட மோசமானவர் !

தமிழில் எத்தனை வசவு வார்த்தைகள் உண்டோ, தரம் தாழ்ந்த வகையிலும் கூட, ஒருவரை திட்டித் தீர்க்கலாம் என்றால் அது வீரபாண்டிய ஆறுமுகம் மீது. சேலம் மாவட்டம் வளர்ச்சியின்றி வீணாகிப் போனதென்றால், அது இவரால் தான் என்று கூறலாம்.

கருணாநிதியைப் போல் இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர். அயோக்கியத்தனம் ? அதைத்தவிர வேறொன்றும் அறியாதவர் இவர். பிரபல இரண்டெழுத்து நடிகை ஒருவரின் சித்தி நடிகையை மடக்கி, அவரையும் பெண்டாளத் துணிந்தவர். அவர் (நடிகை) கர்ணன் இயக்கிய படங்களில் ஜெயசங்கருக்கு ஜோடியாக சில படங்களில் நடித்தவர்.

இது பற்றியும், வீரபாண்டியின் பிற பராக்கிரமங்களையும் 'தினமலர்' - வாரமலரில் "உள்ளும் புறமும்" என்ற தொடரில் இரண்டு பக்கம் எழுதி அம்பலப்படுத்தினேன். அது எப்படி வீரபாண்டியாரின் காதுகளுக்கு எட்டியதோ! அந்த பக்கங்கள் மட்டும் சேலத்தில் கிழிக்கப்பட்டு வினியோகிக்கப் பட்டிருந்தது. ஊடகங்களும் அங்கே செயல்பட முடியாமலே இருந்தன.

எனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் இது. தி.மு.க ஆட்சி காலத்தில் (1988 அல்லது 1989) நடந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த போது வன்முறை செயல்களை மட்டுமே அரங்கேற்றி வந்தனர் வீரபாண்டியரின் கோஷ்டியினர். அப்படித்தான் அ.தி.மு.கவில் களப் பலியான பூலாவரி சுகுமாரன், வீரபாண்டி ஆறுமுகத்தின் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இத்தனைக்கும், ஆறமுகத்தின் சகோதரர் மகன் தான் சுகுமாரன்.

1987-க்கு பின்பே ஆறுமுகத்தின் கொடூர முகம் வெளிப்பட்டது. குடும்பத்தினர் அராஜக முகங்கள் கொண்டு அலைந்தனர்.

சேலம் அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக (நர்ஸாக) பணியாற்றியவர் கலைச் செல்வி. அவரை, தங்கியிருந்த விடுதியிலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது ஒரு கும்பல். அத்தோடு, கொன்று, தற்கொலை செய்தது போல் நாடகம் அரங்கேற்றினர். காவல் துறை கைகட்டிக் கொண்டது. அதனால், சேலம் வாயைப் பொத்திக் கொண்டது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினரும், மருத்துவமனை ஊழியர்களும் போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

'தேவி' இதழிலிருந்து என்னை சேலம் அனுப்பி வைத்தனர். நான் போராட்டக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். மருத்துவமனை ஊழியர்களிடமும் பேசினேன். செவிலியரின் ஊரான வாழப்பாடிக்கு சென்று குடும்பத்தாரை சந்தித்தேன். சுற்றி சுற்றி ஒருவர் பெயர் வந்து நின்றது. அவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் செழியன். செழியனும், அவரது நண்பர்களுமே இந்த காரியத்தை செய்ததாக (மறைமுகமாக) சொன்னார்கள். அதை நான் செழியன் பெயர் குறிப்பிடாமல், அரசியல்வாதியின் மகன் என்று மட்டுமே குறிப்பிட்டு 'தேவி'யில் எழுதினேன்.

அந்த செழியன் பின்னாளில் 'எய்ட்ஸ்' வந்து 40-வயதிலேயே பலியானதாக பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்கள். அப்படியும் வீரபாண்டி ஆறுமுகம் திருந்தவில்லை.

(மீதி நாளை).......


'இதயக்கனி' எஸ்.விஜயன்

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: