www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை புரிந்தால் தீமை தான் திரும்பும்!

சென்னை -  2017-01-02 22:44:16.0



நாம் பிறருக்கு நம்மை செய்கிறோமோ இல்லையோ.., தீமை செய்யாதிருக்க பழகிக்கொள்ள வேண்டும். எந்த ஒரு தவறுக்கும் குற்றத்திற்கும் நிச்சயம் தண்டனை உண்டு. சட்டம் தண்டிக்கா விட்டாலும், காலத்தின் தண்டனை தவறாது. இதற்கு நடைமுறை உண்மைகளை நிறைய சொல்ல முடியும்.
பாக்கிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்தவர் 'ஜியா வுல் ஹக்', தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் பாக்கிஸ்தானின் சர்வாதிகாரியாகி இந்தியாவின் எல்லை பகுதிகளில் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, தன் சொந்த நாட்டிலேயே.., தலைவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான அவரது நடவடிக்கைகள் எல்லை கடந்தது. அளவுக்கு மீறினால்..... ? விமானத்தில் பறந்து சென்றவர், விமானம் விண்ணிலேயே வெடித்து சிதறி, விமானத்தின் பாகங்கள் மட்டுமே கிடைத்ததேயன்றி அவரது உருவம் எதுவும்.

சிக்கவில்லை.விண்ணிலேயே பஸ்மமாகிப் போனார். இதுதான் அவரது பாவத்திற்கு கிடைத்த சம்பளம்.
இங்கு ஒரு தலைவர் தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்தையும், அரசியல் தன்மைகளையும் சீர்குலைத்து - பிற கட்சிகளும் அதில் விழுந்து மூழ்கி - எல்லாம் மாசு பட்டுப் போக, இன்று அந்த தலைவர் வாழவும் முடியாமல் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார். தன் பாவத்திற்கான சம்பளத்தை வாழும் காலத்திலேயே அனுபவிக்கிறார்.

இதற்கு புராண உதாரணமும் கூறலாம். மகாபாரதத்தில் அஷ்வத்தாமன் துரோணாச்சாரியாரின் மகன். தந்தையிடமுள்ள நல்ல விஷயங்கள் எதுவும் மகனிடம் இல்லாமல் போய் துரியோதனனுடன் இனணந்து அத்தனை பாவச்செயல்களும் முனைந்து செய்யப்போய்.. கிடைத்த வரம்., சாவே இல்லாமல் அத்தனை துன்பங்களையும் எதிர்கொள்ளவேண்டும் என்பதாகிப் போனது. அவன் இறுதிக்காலம் முழுவதும் நரகம். இது ஜென்ம தண்டனை.

இன்று அரசியலில், நாட்டில் நடக்கும் பல விஷயங்களும் எதிர்மறையாகவே உள்ளன (negative). இதற்கு காரணமான அத்தனை பேரும், அதற்குரிய விலையானது, பாவத்தின் சம்பளம் என்பது காலத்தின் திணிப்பாக இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர கடமைபட்டுள்ளனர்.

"இது கடுமையான பதிவுதான் என்றாலும் இது தொடரும் ".




புகைப்படம் 1: மறைந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முகமது ஜியா உள் ஹக்

புகைப்படம் 2: மகாபாரத்ததின் காட்சிகள்

உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: