www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

போக்குவரத்து சாலைகளும் இனி மின்சக்தியை உற்பத்தி செய்யும்!

சென்னை -  2016-05-05 22:46:12.0



உலகின் சிறிய நாடுகளில் ஒன்று ஐரோப்பாவிலுள்ள நெதர்லாந்து. அங்கிருந்து புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. மழை நீரை உறிஞ்சி பூமிக்கடியில் சேமிக்கும் சாலை அமைக்கும் பணிகளைச் செய்தது கண்டு அண்மையில் வாட்ஸ் அப், முகநூலில் நாம் வியந்தோம்.
இப்போது அங்கு நவீன முறையில் வேறுவிதமான சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 100 மீட்டர் தூர சாலையின் மூலமாக ஓராண்டில் 10 ஆயிரம் கிலோ வாட மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

ரொம்ப எளிமையான, அருமையான விஷயம் என்னவென்றால் மக்கிப் போகாத பிளாஸ்டிக் கழிவுகள் எல்லாம் இணைத்து அமைக்கும் இந்த சாலை எந்த பருவநிலைக்கும் ஈடு தரக் கூடியது மட்டுமின்றி, சூரிய சக்தியை உள் வாங்கி சூரிய மின் சக்தியை சேமிக்கும் விதமாக கண்ணாடி இழைகளுடன் பொருத்தப்படுகிறது. இதன் மூலமாக சாலை ஓர மின் விளக்குகளுக்கு மின்சாரம் தர முடியும். இந்த சாலை தற்போது பரீட்சார்த்தமாக அமைக்கப்படுவதால் நடந்து செல்வதற்கும், அதிக கனமில்லாத இரு சக்கர வாகனங்கள் மட்டுமே முதலில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. படிப்படியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மூலமாக விரைவில் லாரி, பேருந்து, கார்கள் என்று கனரக வாகனங்களையும் (Heavy Vehicles) போக்குவரத்திற்கு பயன் படுத்த முடியுமா என்பதும் தெரிய வரும். இது நடந்தால் மாசில்லாத உலகம் இனி மலரும்.


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: