www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மலேசியாவில் எம்.ஜி.ஆர் நூல் வெளியீடு!

கோலாலம்பூர் -  2018-08-11 07:43:10.0



மலேசிய நாட்டில் தைப்பிங், பினாங்கு, ஈப்போ, மலாக்கா, ஜோகுர் (இரண்டு முறை) 'இதயக்கனி' ஒத்துழைப்புடன் எம்.ஜி.ஆர் விழாக்கள் நடத்தினாலும், தலைநகர் கோலாலம்பூரில் நடத்தவில்லையே என்ற மனக்குறை நீண்ட நாட்களாக இருந்தது. அது 05.08.2018 'நட்பு நாளில் (FRIENDSHIP DAY)" குறை தீர்ந்தது.

நிறைவாக இருக்க நண்பர்கள் திரு.மணிவாசகம் (மலேசியா), திரு.செழியன், திரு.மீடியா பாஸ்கர் (சென்னை) மற்றும் இதயக்கனி வாசகர்கள், முகநூல் நண்பர்கள் பேருதவி புரிந்தனர்.



இந்த நிகழ்வு "எம்ஜிஆர் நூல்கள்" வெளியீட்டு விழாவாக சிறப்பாக அமைந்தது. இதற்காக 'பப்பு நியூ கினியா' நாட்டின் வெஸ்டு பிரிட்டன் கவர்னர் திரு.சசீந்திரனின் மனைவி திருமதி.சுபா சசீந்திரன் வருகை தந்தவரிடம் "ஐந்து நிமிடம் உங்களுக்கு தெரிந்த எம்.ஜி.ஆர் பற்றி உரையாற்றுங்கள்" என்று கேட்டுக் கொண்டேன். எவ்வித தயாரிப்புமின்றி வந்ததால் முதலில் தயங்கியவர், பேச அழைத்ததும், எம்.ஜி.ஆர்.பற்றி அவர் பேசப்பேச வியப்பும்,நெகிழ்வும் ஏற்பட்டது."

மலேசிய நாட்டின் 'அஸ்ட்ரோ வானவில்' தமிழ் தொலைக்காட்சி நிர்வாகி திரு.என்.சி. ராஜாமணி வருகை தந்து வாழ்த்தினார். ஊடக தோழி பொன். கோகிலம், திரு.ராஜா கண்ணன், திரு. அய்யனார் என்று பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். சுவாமிகள் மகேந்திரன் எம்.ஜி.ஆர் பற்றி 'தர்மம் தலைகாக்கும்' என்ற தலைப்பில் சிறப்பாக பேசினார்.



சிங்கப்பூரிலிருந்து புகழேந்தி, பாண்டிதுரை, ஜோகுரிலிருந்து மாரியப்பன், ஈப்போவிலிருந்து எம்.ஜி.ஆர். பாலன், பேராவிலிருந்து மணிவண்ணன் என்று பலர் வந்திருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுடன் எம்ஜிஆர் ஹரி, எம்ஜிஆர் தேவா ஆகியோர் எம்ஜிஆர் தோற்றத்தில் ஆடிப்பாடி மகிழ்வித்தனர்.

திருமதி.மீரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: